Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:
அக்கம் பக்கம்

வியர்வை துர்நாற்றத்தைப் போக்க டியோடரன்ட் பயன்படுத்துவது பலருக்குப் பழக்கம். ஆனால் தொடர்ந்து டியோடரன்ட் பயன்படுத்தும்போது அக்குள் பகுதியில் உள்ள பாக்டீரியா கிருமி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பெல்ஜியம் பல்கலைக்கழகம் ஒன்று தெரிவித்துள்ளது. ‘டியோடரன்ட் இந்த பாக்டீரியா உருவாக்கும் நாற்றத்தை மட்டுமே தற்காலிகமாகப் போக்குகிறது. பாக்டீரியாவை அழிப்பது இல்லை’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பீ கேர்ஃபுல்!

அக்கம் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

99 வயதான பாட்டி ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார்். அமெரிக்காவைச் சேர்ந்த, இடா கில்லிங் என்ற பாட்டி, சென்ற மாதம் ஓஹியோவில் நடந்த முதியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 59.80 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார். ‘‘தன் மகள் தந்த ஊக்கத்தால்தான் இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது” என்கிறார் இடா. ‘‘ஊட்டச்சத்து உள்ள உணவுகளை மட்டுமே உண்பேன். சுவைக்காக எந்த உணவையும் நான் உண்பதில்லை. உங்களை நீங்கள் நேசித்தால், உங்களது உடல்நலனில் கட்டாயம் கவனம் செலுத்துவீர்கள்” என்கிறார். பாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்!

அக்கம் பக்கம்


சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தை அதிரவைத்த நோய் சிக்குன்குன்யா. இந்தக் காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் மருத்துவ ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. தற்போது இதைப் பரிசோதனை செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், விரைவில் தடுப்புமருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  நம்பிக்கை வீண் போகாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism