வெளிநாட்டில் பிசினஸ் செய்துவரும் சகாயத்துக்கு 55 வயது. அவருடைய டாக்டரிடம் ஆலோசனைக்குச் சென்றிருந்தபோது, மனநல மருத்துவரை அணுகும்படி அவர் பரிந்துரைத்திருந்ததால் என்னிடம் வந்திருந்தார். 'நானே நிறையப் பேருக்கு மனநல கவுன்சலிங் கொடுத்திருக்கேன். என்னைப்போய் ஏன் மனநல மருத்துவரைப் பார்க்கச் சொன்னாங்கன்னு தெரியலை டாக்டர்?' என்றவரிடம் அவரது குடும்பப் பின்னணி மற்றும் என்னிடம் அனுப்பிய காரணம் குறித்துக் கேட்டேன்.

'என் கூடப் பிறந்தவங்க எட்டு பேர். ரொம்ப ஏழ்மையான குடும்பம். நான் அதிகம் படிக்கலை. சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்து வேலைபார்த்தேன். அப்புறம் நண்பர்கள் உதவியோட துபாய்க்குப் போய், அங்க பிசினஸ் செய்யும் அளவுக்கு முன்னேறினேன். இப்போ குடும்பத்தோட துபாய்ல இருக்கேன். எனக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. பெரிய பையனுக்கு 28 வயசு, கல்யாணம் ஆகி இந்தியாவில் இருக்கான். பெரிய பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. கடைசிப் பொண்ணுக்கு எட்டு வயசுதான் ஆகுது. எனக்கு சில வருடங்களுக்கு முன்னால், இடது தோள்பட்டையில் வலி வந்தது. துபாய்லயே பெஸ்ட் டாக்டரிடம் கன்சல்ட் பண்ணதுல, எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்லிட்டாரு.

இந்தியா வந்து டாக்டரைப் பார்த்தப்ப, இதயத்துல சின்னதா அடைப்பு இருக்கிறதா சொன்னார். உடனே

அடைப்பை நீக்கும் சிகிச்சையும் எடுத்துக்கிட்டேன். ஆனாலும் வலி தொடர்ந்ததால், எலும்பு டாக்டர்கிட்ட போனேன். சில டெஸ்ட்களுக்குப் பிறகு, சவ்வு சின்னதாக் கிழிஞ்சிருக்குன்னு சொன்னார். ஆபரேஷன் செய்யும்போது லேசா சுயநினைவு இருந்தது. பெரிய டாக்டர் 'இவருக்கு ஒரு பிரச்னையும் இல்லையே, இவருக்கு ஏன் ஆபரேஷன் செய்தீங்க?’னு மத்த டாக்டர்களைத் திட்டினது காதில் விழுந்தது.

அந்த ஆபரேஷனுக்குப் பிறகு தோள்பட்டை வலி குறைஞ்சது. மூணு மாசம் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுக்குப் பிறகு திடீர்னு வலதுபக்க தோள்பட்டை வலிக்க ஆரம்பிச்சது. இந்த முறை லண்டனில் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். வாயுத் தொல்லை இருந்தாலும் வலி வரும்னு வயிறு டாக்டரைப் பார்த்தேன். அவரும் ஒண்ணும் இல்லைனு சொன்னதும், திரும்ப ஆர்த்தோ டாக்டரைப் பார்த்தேன். அவர் 'உங்களுக்கு ஏற்கனவே இடது கையில் அறுவைசிகிச்சை செஞ்சுதானே வலி போச்சு. அதுபோல வலது கையிலும் செஞ்சிடலாமா?’னு கேட்டார். நானும் சரின்னு சொல்ல, ஆபரேஷன் நடந்து, கொஞ்ச நாள் வலி இல்லாம இருந்தது. இப்பத் திரும்பவும் வலி வர ஆரம்பிச்சிருக்கு. அதன் பிறகுதான், மனநல டாக்டரிடம் போகச் சொன்னாங்க' என்றார்.

அப்போது, அவரது 8 வயது மகள் அப்பா என்று ஓடிவந்து அவர் மடியில் உட்கார, அவரது மனைவி பதறியபடி உள்ளே வந்து, மகளை அதட்டி வெளியே அழைத்துச் சென்றார். அப்போது இருவர் முகங்களும் வாடிப்போயின.

அவரது மனைவி, குழந்தைகள் பற்றி கேட்டேன். 'என் மனைவி ரொம்ப நல்லவ. நான் கஷ்டப்படும்போது எல்லாம் என்கூட இருந்து ஆறுதல் சொல்லி என் வெற்றிக்குக் காரணமா இருந்தா. என் மகனுக்குக் கல்யாணம் ஆகும்போதுதான் எனக்கு மூன்றாவது பெண் பிறந்தா. இந்த வயசுல இதெல்லாம் தேவையான்னு நிறையப் பேர் பேசினாங்க. ஆனா, கருக்கலைப்பு செய்றது எங்க மதத்துக்கு எதிரானதுனு நான் செய்யலை.

என் சொந்த அக்கா மகளைத்தான் என் மகனுக்கு கல்யாணம் செஞ்சுவச்சேன். ஆனா சதா குறை சொல்லிக்கிட்டே இருப்பா. எங்க காதுபடவே என் மூணாவது பொண்ணைத் திட்டுவா. 'சின்ன குழந்தை மேலதான் உங்க அப்பாவோட முழுப் பாசமும் இருக்கும், உங்களைக் கவனிக்க மாட்டார்’னு மகன், மகளிடம் சொல்லிச்சொல்லியே அவங்களை என்கிட்டே இருந்து பிரிச்சிட்டா.இப்போதைக்கு எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் என் கடைக்குட்டிதான். அவ என்னைக் கட்டிப்பிடிச்சுத்தான் தூங்குவா. என்மேல அவ காலைப் போட்டுத் தூங்கினால்தான் அவளுக்கும் தூக்கம் வரும். எனக்கும் தூக்கம் வரும். ஆனா, என் மனைவி,

இவ்வளவு வயசாகிடுச்சு... இன்னும் அவளைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறீங்களே’னு கண்டிப்பாள். என்னதான் சொத்து சுகம் இருந்தாலும் ஒரு தனிமையை, வெறுமையை உணர்றேன் டாக்டர்' என்றார் கண்ணீருடன். அப்போதுதான் அவரது வலிக்கான காரணம் புரிந்தது.

சகாயத்துக்கு கன்வர்ஷன் டிஸ்ஆர்டர்’ என்ற மனப் பிரச்னை இருந்தது. அதாவது, அவருக்கு இருந்த மன வலி உடல் வலியாக வெளிப்பட்டிருந்தது. தன் கடைசி மகள் மீது இருந்த அதிகப் பாசத்தால்தான் உடலில் ஏற்பட்ட சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்்திருக்கிறார். அவளுக்காக வாழ வேண்டும் என்ற அவரது மனபாரம் உடல் பாரமாக அழுத்தியது. குழந்தை வளர, வளர அவளைக் கட்டி அணைக்க முடியவில்லையே என்றும், அவளைக் காரணம் காட்டி அனைவரும் நம்மை வெறுக்கிறார்களே, ஏளனமாகப் பேசுகிறார்களே என்றும் நினைக்கும்போதெல்லாம் இந்த வலி அதிகரித்திருக்கிறது.

அவருக்கு உள்ள பிரச்னையை விளக்கி அவர் எடுத்து வந்த மருந்து மாத்திரைகளை நிறுத்தச் சொன்னேன். அப்போதுதான் மன அமைதிக்காகப் பரிந்துரைக்கும் மாத்திரைகள் பலன் அளிக்கும். மூன்று நாட்களுக்கு வேறு மருந்து எடுக்காமல் அதிக தண்ணீர் அருந்தச் சொன்னதில், உடலில் இருந்த அந்த ரசாயனங்கள் வெளியேறின. அதன் பிறகு நான் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.இதனிடையே அவரது மனைவியை அழைத்துப் பேசினேன். 'இவ்வளவு நாள் அவருடன் அன்பாக இருந்திருக்கீங்க. இப்போ, அவர் கடைசி மகளை அதிகமா நேசிக்கிறார். அந்தக் குழந்தையுடன் கொஞ்சி மகிழ்வதுதான் அவருக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகிறது. நீங்களும் மத்தவங்களும் அதைக் கண்டிக்கும்போது, அது அவருக்கு உடல் வலியாக வெளிப்படுகிறது. மற்றவர்கள் என்ன சொன்னாலும் கவலைஇல்லை, என் கணவர், என் குழந்தையின் சந்தோஷம் என்று யோசியுங்கள். நாளாக ஆக, அவர் மனம் திடப்படும். பள்ளி, கல்லூரின்னு வெளிவட்டத்துக்குப் போறப்போ உங்க மகளுக்கும் அவளின் அப்பாவுக்குமான இயல்பான இடைவெளி ஏற்படும். அதுவரை பொறுத்திருங்க' என்று ஆலோசனை கூறினேன். அவரது மனைவியும் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட்டார். தற்போது எந்த வலியும் இன்றி சகாயம் மகிழ்ச்சியோடு இருக்கிறார்.