Published:Updated:

மனமே நலமா?-35

மகளின் அன்புக்காக மறுகும் தாய்!டாக்டர். எம்.கவிதா, மனநல மருத்துவர், சென்னை

மனமே நலமா?-35

மகளின் அன்புக்காக மறுகும் தாய்!டாக்டர். எம்.கவிதா, மனநல மருத்துவர், சென்னை

Published:Updated:
மனமே நலமா?-35

இரண்டரை வயதுக் குழந்தையுடன் இளம் தம்பதி என்னைப் பார்க்க வந்தனர். 'என்ன பிரச்னை?' என்று கேட்டபோது, அந்தக் குழந்தையின் தாய், 'குழந்தை என்கிட்ட ஒட்டவே மாட்டேங்குறா. ஒரு தாயா என்னால இதைத் தாங்கிக்க முடியலை' என்று தழுதழுத்த குரலில் பேசினார்.

'எங்க சொந்த ஊரு மதுரை. குடும்பத் தேவை காரணமாக, நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போகவேண்டிய சூழல்.  இவர் சென்னையிலும் நான் பெங்களூரிலும் தங்கி வேலை பார்த்தோம். இதனால இவளை என் மாமியார்கிட்ட விட்டுட்டு, நான் பெங்களூருக்குப் போயிட்டேன். மாசத்துக்கு ஒரு முறை குழந்தையைப் பார்க்க ஓடிவந்திருவேன்.  முழுக்க முழுக்க, குழந்தையோடவே நேரத்தை செலவிடுவேன். ஆனாலும், ஏதோ புது ஆளைப் பார்க்கிறது மாதிரி பார்ப்பா.  கிட்ட வரவே பயப்படுவா. பாட்டிகிட்டயேதான் ஒட்டிக்கிட்டு இருப்பா. நானும் அதைப் பெரிசா எடுத்துக்கலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க மாமியார்கிட்டயும் நாத்தனார்கிட்டயும் நல்லா விளையாடறா, சந்தோஷமா இருக்கா. போன வருஷம் இவளோட பிறந்த நாளைக் கொண்டாடும்போதுகூட இவ என்கிட்டயே வரலை. வற்புறுத்தித் தூக்கினா, அழுது ஆர்ப்பாட்டம் செய்யறா.  இப்படியே விட்டா என் குழந்தை என்னை சுத்தமா மறந்திடும். எங்க, என்னை விட்டு பிரிஞ்சிடுவாளோனு பயம் வந்திடுச்சு. என் மாமியார்தான் அவளை என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறாங்களோனு தோணுச்சு.  அதனால முதல் வேலையா, ஊருக்குப் போய், வேலையை ரிசைன் செஞ்சுட்டு, சென்னைக்கு வந்து ஒரு வீடு பார்த்தேன். குழந்தையோடவே இருக்க ஆரம்பிச்சேன்.

மனமே நலமா?-35

ஆனா, இப்பவும், என்கிட்ட ஒட்டவே மாட்டேங்குறா. பல நேரத்துல என்னைப் பார்த்தாலே அழ ஆரம்பிச்சிடுறா. பாட்டிகிட்ட போகணும்னு அடம் பிடிக்கிறா. அவளை சமாதானப்படுத்த அப்பப்போ ஊருக்குக் கொண்டுபோய் மாமியார்கிட்ட விடுவோம். ஊருக்குப் போனதும் பாட்டிகூடவே இருக்கிறா. என்னைக் கண்டுக்கிறதுகூட கிடையாது. இரண்டு நாள் கழிச்சு திரும்ப வரும்போது பாட்டி, அத்தை கூடத்தான் இருப்பேன்னு அடம்பிடிக்கிறா. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. பீடியாட்ரிக் டாக்டர்தான், 'மனநல மருத்துவரிடம் போய்ப் பாருங்களேன்’னு சொன்னார். அதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தோம்' என்றார்.

அந்த இளம் தாய் சொல்லச்சொல்ல, பிரச்னை என்ன என்பது புரிந்தது. இரண்டரை வயதுதான் என்றாலும் அந்தக் குழந்தையிடம் பேசினேன். 'அம்மாவைப் பார்த்து ஏன் அழற, அம்மாவைப் பிடிக்காதா?'' என்று கேட்டபோது அந்தக் குழந்தை, 'அம்மாவைப் பிடிக்கும். ஆனா, எனக்கு என் பாட்டிதான் வேணும். அவங்கதான் எனக்கு நிலா காட்டி சோறு ஊட்டுவாங்க, கதை சொல்லுவாங்க, என்கூட விளையாடுவாங்க. எனக்கு பாட்டிகிட்ட போகணும்' என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்து அந்த அம்மாவும் அழ ஆரம்பித்தார். குழந்தையின் நடவடிக்கையால், அந்தத் தாய் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தது தெரிந்தது.

பொதுவாக, ஒரு குழந்தை வளர்ச்சியின் ஆரம்ப நிலையில், யார் தனக்கு அன்பு செய்கிறார்

களோ, தன்னைக் கவனித்துக்கொள்கிறார்களோ, தனக்காக நேரம் செலவிடுகிறார்களோ, அவர்களையே தன் தாயாக நினைத்துக்கொள்ளும். அந்தக் குழந்தைக்கு, அவர் அம்மாவாக இருந்தாலும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட தன் பாட்டி மீதுதான் அந்தக் குழந்தை அன்பு செலுத்தியிருக்கிறது. அம்மாவின் இடத்தைப் பாட்டிக்குக் கொடுத்துவிட்டது. இது குழந்தைகள் மத்தியில் மிக அரிதாக ஏற்படக்கூடிய பிரச்னை. இதை ஆரம்பநிலையிலேயே சரிசெய்யாவிட்டால், அட்டாச்மென்ட் டிஸ்ஆர்டராக மாறியிருக்கும்.

மனமே நலமா?-35

இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை பெற்றோர், மிக ஆரம்பநிலையிலேயே வந்துவிட்டதால் சில தெரப்பிகள் மூலம் சரிப்படுத்தி விட்டோம். நாளை அந்தக் குழந்தை பாட்டியைவிட அம்மாவிடம்  அட்டாச்மென்ட் ஆகும்போது அந்த பாட்டிக்கும் மன அழுத்தம் ஏற்படலாம் என்பதால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அம்மாவுக்கும் குழந்தைக்கும் 'பிஹேவியர் தெரப்பி’ அளிக்கப்பட்டது. குழந்தை அழும்போது, எப்படி அதன் கவனத்தைத் திசை திருப்பி சமாளிப்பது, அவள் மனதை மாற்றுவது எப்படி என்பது போன்ற தெரப்பிகள் அளிக்கப் பட்டன. அதேபோல குழந் தைக்கும், அவளுக்கு புரிந்து கொள்ளும் விதத்தில் அம்மாவை ஏற்றுக்கொள்வதற்கான சில பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தத் தொடர் பயிற்சிகளின் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தை தன் தாயிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள்.

குழந்தையைப் பெற் றோரிடமோ, வேலையாட்களிடமோ ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்பவர்கள், இந்தப் பிரச்னையை அதிகம் சந்திக்கிறார்கள். பெற்றோர் என்னதான் தங்கள் வேலையில் பிஸியாக இருந்தாலும், குழந்தைக்காக நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைக்கு அட்டாச்மென்ட் டிஸ்ஆர்டர் ஏற்பட்டுவிட்டால் பிறகு பெற்றோரிடம் நெருக்கம் குறையும்.எதற்கெடுத்தாலும் எரிச்சல், கோபம், அடங்க மறுத்தல் என அவர்களது ஒட்டுமொத்த நடவடிக் கையிலும் மாற்றம் ஏற்பட்டு விடும். பெற்றோர்களைவிடவும் மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவர். அந்நியர்களிடமும் மிக எளிதில்நெருக்கம்

கொள்ளும் அளவுக்கு, அவர்களது சமூக உறவும் பாதிக்கும் என்பதை வேலைக் குச் செல்லும் பெற்றோர் உணர  வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism