Published:Updated:

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

பிரேமா நாராயணன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

பிரேமா நாராயணன், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:

வாழ்வின் பாதிப் பிரச்னைகளை சரிசெய்வதும்,  உறவுகளுக்குள் சிறு பிரச்னை என்றால், முதலில் அடிவாங்குவதும் புன்னகைதான். 'உறவுகளில் மட்டுமல்ல, உடலுக்குள்ளே பிரச்னை என்றால் கூட புன்னகைக்குத்தான் முதலில் டேமேஜ்’ என்கிறது பல் மருத்துவம். பற்களை சரியாகக் கவனித்துக் கொண்டாலே, தோல் நோய் முதல் இதயநோய் வரை தப்பித்துவிடலாம்'' என்று அக்கறையாக எச்சரிக்கிறார் டாக்டர் ஜமுனா உதயராஜா.

பல்லுல ஒரு பிரச்னையும் இல்லை, வலிக்கக்கூட இல்லை, ஆனாலும் அந்த டாக்டர் எதுக்காக உங்களைப் பார்க்க சொன்னார்?'' என்கிற கேள்விகளோடு வருபவர்களைத் தொடர்ந்து சந்திக்கிறார் டாக்டர் ஜமுனா.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'போன வாரம் ஒரு லேடி  என்கிட்ட வந்தாங்க. உடல் முழுக்க அரிப்பு, தடிப்பு வந்து ரெண்டு வாரமா கஷ்டப்படுறதா சொன்னாங்க. 'பூரான் கடிச்ச மாதிரியே இருக்கு டாக்டர், அலர்ஜிக்கு மாத்திரை சாப்பிட்டும் சரியாகலை’னு புலம்பினாங்க. தோல் டாக்டர் அவங்களுக்கு பிரச்னை தோல்ல இல்லை, பல்லுலதான்னு தெரிஞ்சு என்னிடம் அனுப்பிருந்தார். தோல் அரிப்புக்கு எதுக்காக பல் டாக்டர்னு அவங்களுக்குப் புரியலை.

அவர் வாயை டெஸ்ட் செய்தபோது, சில இடங்களில் ஈறில் வீக்கமும், ரத்தக் கசிவும் இருந்தது. பற்களைத் தாங்கிப் பிடிக்கும் எலும்பு அடர்த்தி குறைந்தும் இரண்டு கடைவாய்ப் பற்களின் வேர்ப் பகுதியில் ஆழமான சொத்தையும் இருந்தது தெரிந்தது. நான்கு கடைவாய்ப் பற்கள் எலும்பின் ஆழத்தில் கோணலாகவும் இருந்தது. ஆனால் அவருக்கு இதுவரை பல் வலி இல்லாததால், இந்தப் பிரச்னை தெரியவில்லை. ஈறில் இருந்து ரத்தம் வந்ததை அவர் பெரிய விஷயமாகக் கருதவில்லை.  அந்தப் பெண்ணுக்கு வாயில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதால்தான் உடல் அரிப்பு ஏற்பட்டிருந்தது. இரண்டு வாரங்களில், அவரது பல் தொற்றுக்கு சிகிச்சை முடிந்து, அவரது பல் பிரச்னைகள் சரி செய்யப்பட்டதும் அவரது தோல் பிரச்னை தானாகவே சரியாகிவிட்டது. பல்லில் ட்ரீட்மென்ட் எடுத்தா, தோல் நோய் எப்படி சரியாப் போகும்னு நம்ப முடியாமத்தான் இங்க இருந்து போனாங்க'' என்று சிரிக்கிறார் டாக்டர் ஜமுனா.

உடல் ஆரோக்கியத்தில், வாய் சுகாதாரம் மிக முக்கியம். பற்கள், ஈறுகளில் பிரச்னை என்றால், உடலின் பல்வேறு பகுதி களையும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். எல்லாப் பிரச்னைக்கும் வேர், பல்லாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் பற்களை சுத்தமாக வைத்திருப்பதும், அடிக்கடி பரிசோதிப்பதும், பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கும்!

பல்லைப் பார்த்துச் சொல்லி விடலாம்!

பல் கூச்சம்  பல் சொத்தையினாலும் எனாமல் போவதாலும் ஏற்படும். ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம்  ஈறுகளில் அழுக்கு சேர்வதால் வரும் வாய் துர்நாற்றம்  ஈறு நோய்கள் மற்றும் வயிற்றில் ஏதேனும் பிரச்னை.

பல்லால் வருமே பாதிப்பு!

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, பற்களில் அல்லது ஈறுகளில் பிரச்னை இருந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்.  பல் பிரச்னையை சரிசெய்தால், சர்க்கரை குறைய வாய்ப்பு இருக்கிறது.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  கடைவாய்ப் பற்கள் சொத்தையாகவோ, கோணலாகவோ இருந்து, அவை பிடுங்கப்படுவது சமயங்களில் தலைவலிக்குத் தீர்வாக அமையலாம்.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!
’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் கிருமிகள் அதிகரிப்பதால், 'சப் அக்யூட் பாக்டீரியல் எண்டோகார்டிட்டிஸ்’    (Sub Acute Bacterial Endocarditis) என்ற இதயநோய் வருவதற்கு அரிதாக வாய்ப்பு உள்ளது.  

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  காரணம் தெரியாத மூட்டுவலிக்கும், கண்களின் பிரச்னைக்கும் பற்கள் பல நேரங்களில் காரணமாக இருக்கலாம்.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  கர்ப்பிணி பெண்கள், குறைப் பிரசவத்தைத் தவிர்க்க, பல் டாக்டரைப் பார்த்து சிகிச்சை எடுப்பது அவசியம்.

பல் துலங்க பளிச்’ டிப்ஸ்

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  வாய் சுகாதாரத்துக்கு மிகவும் முக்கியம், பல் துலக்குதல். முடிந்தால், ஒவ்வொரு முறையுமே சாப்பிட்டதும் துலக்குதல் மிகவும் நல்லது.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  பல் துலக்கும்போது, மேலிருந்து கீழாகத் துலக்கவேண்டும். இடவலமாகத் தேய்க்கக் கூடாது.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  ஓவர் பிரஷ்ஷிங்’ கூடாது. எனாமல் போய்விடும். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் துலக்கினால் போதுமானது.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  பல்லிடுக்கில் ஏதாவது சிக்கிக்கொண்டால், எதையாவது வைத்துக் குத்தாமல், ஃப்லாஸ்’ எனப்படும் நூல் கொண்டு சுத்தம்செய்யவேண்டும்.

’பல்’ கொஞ்சம் கவனம், எப்போதும் புன்னகை!

  மென்பானங்கள், இனிப்புப் பண்டங்கள், பல்லில் ஒட்டிக்கொள்ளும் உணவுப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிடவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism