Published:Updated:

நம்ம சாப்பாட்டுப் புராணம்

உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும்

நம்ம சாப்பாட்டுப் புராணம்

உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும்

Published:Updated:

'நாக்குக்கு கீழே நடப்பது பற்றி நமக்கென்ன கவலை' என்ற மனோபாவத்தில், ருசிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உண்ணும் பழக்கத்துக்கு,  நம்மில் பெரும்பாலானவர்கள் அடிமையாகிவிட்டோம். ஆரோக்கியமான  ரெசிப்பிகள் என்று சொல்லப்படும் நூல்கள் படிக்க நன்றாக இருந்தாலும் ருசிக்க ஏற்றவையாக இருப்பதில்லை. ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல் நூல்களோ நடைமுறையில் செய்து பார்க்கச் சாத்தியமற்றவையாக இருக்கின்றன.

நம்ம சாப்பாட்டுப் புராணம்

இந்த  ஆதங்கத்தை முன்னுரையில் வெளிப்படுத்தும் நூலாசிரியர் போப்பு, சரளமான நடையில் நாம் அன்றாடம் செய்து பார்க்கச் சாத்தியமான உணவு வகைகளை சுவாரஸ்யமான மொழியில் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரவா இட்லி, ராகி இட்லி, பெங்களூர் மசால் தோசை, சோள தோசை, கம்பு தோசை, அப்பம், அடை  போன்ற சிற்றுண்டிகளில் தொடங்கி சுக்கா வறுவல், மட்டன் பிரியாணி, ஸ்டீம்டு சிக்கன் வரை நாம் தொடர்ந்து ருசிக்கும் வாடிக்கையான  உணவுகளை எப்படி சுவையாகச் சமைப்பது என்று அழகான, எளிமையான நடையில் விளக்கியுள்ளார்.

ஆசிரியரின் சுவையான வாழ்வியல் அனுபவங்களும் ருசியான சமையல் குறிப்புகளுமாக கலந்து கட்டி மணக்கிறது நூல். குறிப்பாக, ஓட்டல் வைத்து நடத்திய அனுபவங்களைச் சொல்லும் விதம் சிறுகதைக்கு ஒப்பானது. இட்லி மாஸ்டர் பிடித்த வித்தையும், அம்மா அம்மியில் சிவப்பு மிளகாய் காரச் சட்னி அரைக்கும் லாவகமும், அயிரை மீன் குழம்புக்கு மீனாமிர்தம் எனப் பெயர் வைத்திருக்கும் ரசனையும் படிக்கப் படிக்க சுவை. சமையல் மட்டுமல்லாது கடலை, சிறுதானியங்கள், எண்ணெய், கறி, மீன், நண்டு என சமையல் பொருட்கள் ஒவ்வொன்றையும் தரம் பார்த்து வாங்கும் டிப்ஸையும் தருகிறார் நூலாசிரியர்.

சாப்பாட்டு ராமர்களை மகிழ்விக்கும் சாப்பாட்டு புராணம் மட்டுமல்ல இது. சுவையும் ஆரோக்கியமும் மிகுந்த சமையலை தேடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய வாழ்வியல் புத்தகம்.

நம்ம சாப்பாட்டுப் புராணம்

ஆசிரியர்: போப்பு

வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை.

தொலைபேசி: 04424896979 விலை: ரூ 210/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism