Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:

எபோலா வைரஸை அழிக்கும் ரோபோ!

அக்கம் பக்கம்

எபோலா நோய்க்கு அஞ்சாத நாடுகளே இல்லை.ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஐரோப்பாவிலும் பரவுமோ என்ற அச்சத்தில்், எபோலாவை அழிக்க ஆராய்ச்சிகளுக்கு அதிகம் செலவழிக்கின்றன அந்த நாடுகள். எபோலாவுக்கு எதிராக, புதிதாக ஒரு ‘ரோபோ’வை அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோ, ஆஸ்பத்திரியில் உள்ள அறைகளை 5 நிமிடத்தில் துடைத்து சுத்தப்படுத்தி ‘எபோலா’ நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. இந்த ரோபோவுக்கு ‘லிட்டில் மோ’ என பெயரிட்டுள்ளனர். ‘ரோபோ’ மூலம் அல்ட்ரா வயலட் கதிர்களைப் பாய்ச்சி வைரஸ் கிருமிகள் அழிக்கப்படுகி்ன்றனவாம். டெக்சாசில் உள்ள டல்லாஸ் ஆஸ்பத்திரியில் இந்த ‘ரோபோ’ தற்போது பயன்பாட்டில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழித்திரையை பாதிக்கும் வயாக்ரா!

அக்கம் பக்கம்

செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க ஆண்கள் பயன்படுத்தும் வயாக்ரா மாத்திரைகளால் கண் பார்வை பாதிக்கும் என, ஆஸ்திரேலியா நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.  வயாக்ரா மாத்திரையி்ன் ‘சில்டெனாபில்’ என்ற மூலக்கூறில் உள்ள என்சைம் கண்விழித்திரையில் இருந்து, மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி, செல்களை கொன்று, பார்வையை படிப்படியாகக் குறைத்து, பின்னர் முழுவதும் பறிபோகச் செய்யும்.இந்த சோதனை நல்ல உடல் நலத்துடன் இருந்த சுண்டெலிகளில் நடத்தப்பட்டது. வயாகரா மாத்திரை கொடுத்த 2 நாளிலேயே அவற்றின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

வாழ்நாளைக் காட்டும் வாட்ச்!

ஒரு வாட்ச்சை பார்க்கும்போது நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியுமா? அந்த

அக்கம் பக்கம்

வாட்ச்தான் டிக்கர் என்ற பெயருடன் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. உதாரணமாக, 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று காட்டும். இப்படி டெரரான ஒரு வாட்ச்சை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங், “மனித‌ வாழ்க்கையில் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், நாம் எல்லாருமே, விலை மதிப்பில்லாத‌ இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது இல்லை. இந்த வாட்ச்சை பார்க்கும் போதெல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான். அதனால், நாம் எல்லா வேலையையும் சிறப்பாக செய்யவேண்டும், ஒரு சிறந்த, சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு இந்த வாட்ச் கண்டிப்பா உதவும்” என்கிறார். வாழ்நாளை வாட்ச் சரியாக சொல்லிவிடுமா என்று தெரியவில்லை, ஆனால், வாழும் நாட்களை வாட்ச் அர்த்தம் உள்ளதாக்கும்.

இறப்புக்குப் பின்னும் இயங்கும் மூளை!

மனிதனின் இதயத் துடிப்பு நின்றபிறகும், அவனது மூளை 20 முதல் 30 வினாடிகள் வரை செயல்படும்

அக்கம் பக்கம்

என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு நிபுணர் குழு, கடந்த நான்கு ஆண்டுகளாக இது பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். இதயத் துடிப்பு அடங்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த 40 சதவீதம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்படி, இதயத் துடிப்பு அடங்கிய பிறகும் தங்களது நினைவலைகள் மற்றும் எண்ண ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே, தாங்கள் மீண்டும் உயிர் பிழைக்கக் காரணமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஸ்மார்ட் பேண்டேஜ்!

தோலில் காயம் ஏற்பட்டால் மருந்து போடுவது வழக்கம். அந்த மருந்து உடல் காயங்களை எப்படி குணப்படுத்துகிறது என்று கேட்டால், எல்லோராலும் சொல்லி விட முடியாது. இனி, அந்த நிலை இருக்காது போலிருக்கிறது.

அக்கம் பக்கம்

தோலில் உண்டாகும் எரிகாயங்கள்  குணப்படுத்தும்  தன்மையை,காயம் உண்டான பகுதிகளில்  கட்டப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ் எடுத்துக்காட்டும் . இதற்காக, குறித்த பகுதியில் விசேஷ சாதனம் ஒன்றின் மூலம் ஒளி (Flash Lihgt) செலுத்தப்படும். இதனால், பேண்டேஜில் பட்டு தெறிக்கும் ஒளியானது, சாதனத்தில் உள்ள பாஸ்பரஸ் துணிகளில் உறிஞ்சி பதித்துக்கொள்ளும். காயம்பட்ட பகுதியில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தால், பாஸ்பரஸ் துணிகளில் வெளிச்சம் கூடிய தன்மை காணப்படும்.  புளோரோசென்ட் திரையில் மட்டுமே பார்க்க முடியும்.    

கருப்பை இன்றி குழந்தை பெற்ற பெண்.!

அக்கம் பக்கம்

ஸ்வீடனைச் சேர்ந்த 36 வயது பெண் முதன்முறையாக குழந்தை பெற்றுள்ளார். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இருக்கிறது. இவருக்கு பிறவியிலேயே கருப்பை இல்லை. குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினார்.  கடந்த வருடம், 60 வயது பெண்ணின் கருப்பைப் பெறப்பட்டு, இவருக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு இந்தத் தம்பதிகள், கோதன்பர்க்கில் உள்ள சஹிகிரண்ஸ்கா பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அதன் மூலம் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். டாக்டர்களின்  தீவிர கண்காணிப்பில் இருந்த அந்தப் பெண்ணுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் குறை பிரசவத்தில் (31 வாரம்) ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 1.8 கிலோ எடை உள்ளது. தற்போது தாயும் சேயும் நலம். கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றது மருத்துவ உலகின் அரிய சாதனை என்று சொல்லப்படுகிறது.

ஆப் த ‘ரெக்கார்ட்’!   
                                       
சென்னை ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, ‘ஹெல்த் மெமோ’ என்ற ஆப் (App) வெளியீட்டு விழா நடந்தது. மூன்- ஐ குழுமத் தலைவர் பிரதீப் தாதா இந்த ஆப்பை வெளியிட்டு பேசுகையில்,  ‘‘நம்மில் பலரும், ஏதேனும் நோய் தாக்கினால் மருத்துவரை சந்தித்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு சரியானவுடன், மருத்துவ பரிசோதனை தகவல், பிரிஸ்கிரிப்ஷனை தவறவிட்டுவிடுகிறோம். திரும்பவும் வேறு பிரச்னை வந்தால், வேறு

அக்கம் பக்கம்

மருத்துவமனைக்கு செல்லும்போது பழைய மருத்துவத் தகவல்களை இன்றித் தவிப்போம். இந்த கவலை வேண்டாம். உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். பிறந்த குழந்தையில் இருந்து குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் பரிசோதனை முடிவுகளையும், மருந்துச்சீட்டுகளையும், தேதிவாரியாக, ஸ்மார்ட்போனில் உள்ள ஹெல்த் மெமோ என்ற ஆப்ஸில் பதிவேற்றி வைத்துவிட்டால் போதும். ஒவ்வொரு வயதிலும் நமக்கு என்னென்ன உடல்ரீதியான பிரச்னைகள் வந்தது, அதற்கு என்னென்ன மருந்துகளை எடுத்துகொண்டோம், என்னென்ன சோதனைகள் செய்யப்பட்டது, அதன் சோதனை முடிவுகள் என்ன என்ற கேள்விகளை எல்லாம் ஹெல்த் மெமோ என்ற ஆப் மூலம் உலகின் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நாம் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆப் பில் எம்.ஆர்.ஸ்கேன் போன்ற ஸ்கேன் விவரங்களை கூட சேமித்து வைக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த விவரங்கள் அழிந்துவிட்டால் கூட கவலைப்பட தேவை இல்லை. தாராளமாக நீங்கள் ஹெல்த் மெமோ ஆப்பில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். ஆபத்துக் காலங்களில் பயன்படும் இந்த முக்கியமான ஆப் ஐ இலவசமாகவே வழங்குகிறோம்” என்றார்.

மூளை ஆராய்ச்சி... மூவருக்கு நோபல் பரிசு!

உலகம் உற்றுக் கவனிக்கிற விருதுகளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசும் ஒன்று. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று விஞ்ஞானிகளின் பெயர்கள் முறையே ஜான் ஓ கீபே, மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ மோசர். மூளை பற்றிய வெவ்வேறு ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசினை இம்மூவரும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

அக்கம் பக்கம்

இவர்களில், கனடாவின் மெக்.கில் பல்கலையில் உடற்கூறியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஜான் ஓ கீஃபே, ஒரு எலி குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும்போது, அதன் மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட திசுக்கள் தூண்டப்படுவதையும், அதே எலி, மற்றொரு இடத்துக்குச் செல்லும்போது வேறு ஒரு திசு தூண்டப்படுவதையும் கண்டறிந்தார். இதன் மூலம், மேலும் மூளையில், ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியிலேயே இந்த குறிப்பிட்ட ‘இடமறியும் செல்கள்’ (Place cells) தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான மேப்பை உருவாக்குகிறது என்ற உண்மையையும் 1971-ல் கண்டறிந்தார்.
கடந்த 2005-ல் எட்வர்ட் ஐ. மோசர், மே-பிரிட் மோசர் என்கிற மருத்துவ தம்பதிகள் இணைந்து, மூளையின் அருகே உள்ள என்டோரைனல் கார்டெக்ஸ் எனும் பகுதி, ஏதாவது குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும்போது தூண்டப்படுவதாகவும், ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும், இவை ஒருவிதமான ‘கிரிட் செல்’ கட்டமைப்பை ஏற்படுத்தி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மனிதன் சென்றுவர உதவுவதாகவும் கண்டறிந்திருக்கின்றனர்.
மருத்துவ உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் இவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism