Published:Updated:

புதுச்சேரி - புத்துணர்வு தந்த ‘டாக்டர்விகடன்’ மருத்துவ முகாம்

புதுச்சேரி - புத்துணர்வு தந்த ‘டாக்டர்விகடன்’ மருத்துவ முகாம்

புதுச்சேரி - புத்துணர்வு தந்த ‘டாக்டர்விகடன்’ மருத்துவ முகாம்

புதுச்சேரி - புத்துணர்வு தந்த ‘டாக்டர்விகடன்’ மருத்துவ முகாம்

Published:Updated:

ஆரோக்கியம் அனைவருக்கும் சொந்தமானது, பணம், அதற்கு ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு, மக்களிடம் ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வை மேம்படுத்த இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது டாக்டர் விகடன்.

கடந்த செப்டம்பர் 27, புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை, தன்னுடைய ஊழியர்களின் நலனுக்காக, டாக்டர் விகடன், மருத்துவ முகாமை நடத்தித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. புதுச்சேரி சுற்றுலா விடுதியில் புதுச்சேரி அருணா லேப் மற்றும் எக்ஸ்ரே, பாண்டிச்சேரி டயாபடீஸ் சென்டர், பாண்டிச்சேரி ஆல்பா மெடிக்கல் சென்டர், வாசன் கண் மருத்துவமனை மற்றும் வாசன் பல் மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது டாக்டர் விகடன். இந்த முகாமில் சுற்றுலாத் துறை ஊழியர்கள், பொது மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி - புத்துணர்வு தந்த ‘டாக்டர்விகடன்’ மருத்துவ முகாம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, போன்ற பரிசோதனைகளும், சர்க்கரை நோயால் காலில் நரம்புகள், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதைக்  கண்டறியும் 'டாப்ளர்’ பரிசோதனையும், கண், பல் மற்றும்ன் எலும்பு மூட்டு பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பாதிப்பு இருந்தவர்களுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.

முகாமைத் தொடங்கிவைத்து, பரிசோதனைகள் செய்துகொண்ட புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜவேலு, 'இலவச மருத்துவ முகாம் என்றால் சில எளிய பரிசோதனைகள,் மருத்துவர் ஆலோசனை மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள,் பிரத்யேகக் கருவிகள் என, மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

இந்த முகாமுக்கு வந்திருந்த கலைவாணனிடம் பேசியபோது, 'இங்க நான் பண்ண டெஸ்ட் எல்லாம் வெளியே போய் செய்திருந்தால், ஆயிரக்கணக்கில்  செலவாகியிருக்கும். தவிர, சோதனைகளுக்குப் பிறகு எனக்கு எந்த நோயும் இல்லைன்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு வருஷமும் இந்த மருத்துவ முகாம் நடக்கணும்னு ஆசைப்படறேன்' என்றார் உற்சாகத்துடன்.

முகாமுக்கு வந்திருந்த ராதாவுக்கு தன் காலில் என்ன மாதிரியான பாதிப்பு இருக்கிறது என்பதே அங்கு வந்த பின்புதான் தெரிந்தது. ''எங்களை மாதிரி ஏழை மக்களுக்கு இந்த  முகாம் ரொம்ப உதவியா இருக்கு. எனக்கு கால் எலும்பு தேஞ்சுபோய் இருக்குன்னு ஆலோசனை சொல்லி மருந்தும் கொடுத்தாங்க. இனி வலி இல்லாம வேலை செய்யலாம்' என்றார் மகிழ்ச்சியாக. ராதா போலவே முகாமுக்கு வந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்த மகிழ்ச்சி!.

               சு.கற்பகம்,  வீ.இந்து பிரியா 

படங்கள்: ஜெ.முருகன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism