Published:Updated:

`பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்!' - சென்னை நிறுவனத்தின் கொரோனா முன்னெச்சரிக்கை முடிவு

கொரோனா முன்னெச்சரிக்கை முடிவு
கொரோனா முன்னெச்சரிக்கை முடிவு

``அன்று, நாங்கள் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன், அனைவருக்கும் நிறுவனத் தரப்பிலிருந்து இமெயில் மூலம் தகவல் வந்தடைந்தது. அந்த இமெயிலில்.."

உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் திணறி வருகின்றன. பல நாடுகளில் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நாடுகளில் உள்ள பள்ளிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் பல முன்னறிவிப்பின்றி மூடப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை தொடங்கியிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியா முழுவதிலும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, பெருங்களத்தூரில் இயங்கிவரும் `சோஹோ(ZOHO)' மென்பொருள் நிறுவனம் கடந்த வாரம் வியாழன் முதல் தன் ஊழியர்களை அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனக் கூறியிருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் பேசினோம்.

Zoho
Zoho

``கடந்த 5-ம் தேதி அன்று எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் இருவருக்குக் கொரோனா அறிகுறி தென்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டுக்குச் சென்று வந்துள்ளனர் என அலுவலக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அன்று, நாங்கள் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன், அனைவருக்கும் நிறுவனத் தரப்பிலிருந்து இமெயில் மூலம் தகவல் வந்தடைந்தது. அந்த இமெயிலில், அலுவலகத்தில் பணிபுரியும் சிலருக்குக் கொரோனா அறிகுறி தென்பட்டதன் காரணமாக, பணிக்காக இனி யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மாறாக, வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்னரே, விரும்பிய ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற எங்கள் நிறுவனத்தால் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

Office
Office

இப்போது இந்தச் சூழலில், எங்கள் அலுவலகத்தில் சுமார் 5,000 பேர் வீட்டில் இருந்தே வேலைசெய்து வருகின்றனர். இருப்பினும், சில முக்கிய அதிகாரிகள் மட்டும் அலுவலகத்துக்கு வந்து தங்களது பணிகளைச் செய்வதாகத் தெரிகிறது. மேலும், எங்களது அலுவலகத்தில் வருகைப் பதிவுக்காக வைத்திருக்கும் பயோ மெட்ரிக் அமைப்பும் நீக்கப்பட்டுவிட்டது. கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்ட சக பணியாளர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிறுவனத்திடமிருந்து எப்போது மறு அழைப்பு வருகிறதோ அப்போதுதான் அலுவலகத்தில் பணி, அதுவரை வீட்டிலிருந்தபடியேதான் வேலை" என்றார் அந்த ஊழியர்.

Leave
Leave
`சீனாவில் 70% கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்புகின்றனர்!' - உலக சுகாதார  நிறுவனம்

வைரஸ் தொற்று இருப்பதாக அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, `சோஹோ' நிறுவனம் வரும் முன் காக்கும் விதமாகத் தன் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு