Published:Updated:

`கொரோனா தடுப்பில் மக்கள் என்ன செய்ய வேண்டும்?’ - மருத்துவர் சொல்லும் 10 யோசனைகள் #MyVikatan

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

தனித்திருப்பதையும், கூட்டம் கூடுவதை தவிர்ப்பதும், 1 மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிபடுத்தியும், சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க தேவையான விழிப்புணர்வுடன் இருப்பதையும் உறுதிபடுத்த முன்வர வேண்டும்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அரசு கொரோனா விஷயத்தில் சமூகப் பரவல் (Stage 3) இன்னமும் நடக்கவில்லை எனச் சொன்னாலும், கொரோனா தடுப்பில் செயல்படும் முக்கிய மருத்துவர் கிர்தர் கியானி இந்தியாவில் கொரோனா தாக்கம் 3-ம் கட்ட முதல் நிலையில் உள்ளது எனக் கருத்து வெளியிட்டுள்ள நிலையில், மக்கள் இச்சூழலில் என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்து கொள்ளும் கட்டாயம் உள்ளது.

ஊரடங்கு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் என்ன செய்யலாம்?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

1. தெரு வாரியாக குழுக்கள் அமைத்து அரசுக்கு உதவும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு, விதிமீறல்கள் இருந்தால் உடனே அரசுக்குத் தெரியப்படுத்தும் பணிகளை செய்ய முன்வந்து அரசின் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டும். அரசின் பணியில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள உதவ வேண்டும்.

2. இவ்வாறு தனிமைபடுத்தப்படுபவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் (இருமல், தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல்... போன்றவை) உடனே அரசு/உள்ளூர் நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தி, பரிசோதனை செய்ய பாதிக்கப்பட்டவர்களை வெளியே மருத்துவமனைக்கு இட்டுச் செல்லாமல், வீட்டிற்கு கவச உடையோடு அரசின் ஆய்வக பரிசோதகர்கள் வந்து சோதனை மாதிரிகளை எடுத்துச் செல்ல உதவ முடியும். அரசும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்த பின் சோதிப்பதற்கு பதில், வீட்டிற்கு சென்று பரிசோதனை நடத்துவது நோய்பரவலைத் தடுக்கும் என்பதால் அதை செய்ய முன்வர வேண்டும்.

3. பரிசோதனையில் நோய் பாதிப்பு இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த(Isolate) வேண்டும். அதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

4.நோய் அறிகுறிகள் லேசாக இருந்தால், வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தும் வாய்ப்பு இருந்தால் (கழிப்பறையோடு தனி அறை), வீட்டிற்குள்ளேயே மக்கள் தாமாக முன்வந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் மற்றவருக்கு தொற்று ஏற்படுத்துவதை தடுக்க முடியும். முடிந்தால் பரிசோதனையும் செய்வது நல்லது. (கேரளாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் ஒருவருக்கு பத்தனம்திட்டாவில், பரிசோதனையில் நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது)

5. வீட்டிற்குள் நோய் அறிகுறி உள்ளபோது தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத சூழல் இருந்தால் (வீட்டில் ஒரு அறை மட்டும், இரு அறை இருந்தும் பொதுக் கழிப்பிடம் என இருந்தால்), உள்ளூர் சமுதாய அளவில் அதற்கென தனி இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கான தேவைகளை (உணவு) செய்யும் பணியை தகுந்த பாதுகாப்புடன் செய்யலாம். பாதிக்கப்பட்டவர்களும் ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதி இதை ஏற்க முன்வர வேண்டும்.

கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு

6. இந்நோய் தொற்றில் 10-ல் ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும், ஆனால் அவர்கள் மூலம் பிறருக்கு நோய் பரவும் வாய்ப்பு இருப்பது குறித்தான விழிப்புணர்வை தானும் உணர்ந்து மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளலாம்.

7. குடும்பத்தில் ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தால், அவருக்கு முகக்கவசம் கொடுப்பதும், தும்மும்போதோ, இருமும்போதோ கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் என்பதும், சுத்தம்/சுகாதார நடவடிக்கைகளை (சோப்பு போட்டுக் கை கழுவுதல்) மேற்கொள்ள வலியுறுத்தும் பணியை மேற்கொண்டும். வசதி இல்லாதவர்களுக்கு உதவும் பணியை மேற்கொள்ள வேண்டும். வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தும் வாய்ப்பு இருந்தால் அதை மேற்கொள்ள வேண்டும்.

8. தனித்திருப்பதையும் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதும் 1 மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிபடுத்தியும், சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கத் தேவையான விழிப்புணர்வுடன் இருப்பதையும் உறுதிப்படுத்த முன்வர வேண்டும்.

கொரோனா
கொரோனா

9. சில வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டோர்/அறிகுறிகள் தென்பட்டோர் -இவர்களுக்கு வீட்டிலேயே சுயபரிசோதனை(Home testing kits) செய்துகொள்வது பேசப்பட்டு வரும்நிலையில், அதன் சாத்தியக்கூறுகள் இங்கேயும் ஆராயப்பட வேண்டும். பரிசோதனைகள் செய்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தலே நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி.(இதைத்தான் WHO-வும் சொல்கிறது.)

10. பாதிக்கப்பட்ட தனிநபர் ஒருவர் சுயக்கட்டுப்பாடு/உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லையெனில் (தென்கொரியாவில் P31 -ஒருவர் மூலம் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு) சமுதாயத்தில் பலர் பாதிக்கப்படுவது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூகத்தில் அனைவரும் தனக்கான கடமை/பொறுப்பை ஆற்றினால் மட்டுமே நோயை கட்டுப்படுத்தி வெற்றி கொள்ள முடியும்.

அரசும் இதற்கு பக்கபலமாக இருந்து மக்களும், அரசும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

- மருத்துவர் வீ.புகழேந்தி

(சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கம்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு