Published:Updated:

சென்னை:`கொரோனா இனி கொள்ளை நோயில்லை!’ - காரணங்களை அடுக்கும் கணிதப் பேராசிரியர்

கொரோனா
கொரோனா

`சென்னையில் இனி புதிய தொற்றாளர்கள் உருவாவதைத் தடுத்து விட்டாலே, இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து நோயாளிகளும் குணமாகிவிடுவர். தனிமைப்படுத்தபட்டவர்கள் இருக்கலாம். ஆனால், கொள்ளைநோய் அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருக்காது.'

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. சென்னையில் வியாழன் அன்று புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,157 பேர். இது புதன்கிழமை எண்ணிக்கையைவிடக் குறைவு. கொரோனா தொற்று இனியும் கொள்ளைநோய் இல்லை என்று கணித மாதிரியை மேற்கோள்காட்டிக் கூறுகிறார் கணித மையத்தின் பேராசிரியர் சிதாப்ர சின்ஹா.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

R value என்பது தொற்று உள்ள ஒரு நபர், எத்தனை பேருக்கு அந்தத் தொற்றைப் பரப்ப முடியும் என்பதை வைத்துக் கணக்கிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்கான R value தற்போது ஒன்றுக்கும் குறைவாக இருப்பதால், அது இனியும் கொள்ளைநோய் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல் 14-ம் தேதிகளின் கணக்குபடி 0.78+/-0.02 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கம் சென்னையில் குறைந்துள்ளதால் R value-வும் குறைந்துள்ளது.

``தொழில்நுட்ப ரீதியாக சென்னையில் கொரோனா இனியும் கொள்ளைநோய் இல்லை. சென்னையில் இனி புதிய தொற்றாளர்கள் உருவாவதைத் தடுத்துவிட்டாலே, இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து நோயாளிகளும் குணமாகி விடுவர். தனிமைப்படுத்தபட்டவர்கள் இருக்கலாம். ஆனால், கொள்ளைநோய் அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருக்காது'' என்று கூறியுள்ளார் சிதாப்ர சின்ஹா. சென்ற மாதங்களில் R value, ஒன்றுக்கு கீழ் குறைந்தபோது, திடீரென புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடி மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும் எச்சரித்துள்ளார் சின்ஹா.

சென்னை: அறைக்கு வெளியே கிடந்த 6 வேளை உணவு; மர்ம மரணம்! - அதிர்ச்சி கொடுத்த 5 நட்சத்திர ஹோட்டல்

மே 19 வரை, சென்னையில் R value ஒன்றுக்கு, கீழ்தான் இருந்தது. அதற்குப் பின்னர் அதிகரித்து, ஜூலை 4 வரை R value குறையவில்லை. சென்னையில் தற்போது R valu , ஒன்றுக்கு கீழ் குறைந்திருந்தாலும், மதுரையில் ஒன்றுக்கு மேல்தான் உள்ளது.

ஜூலை 4 முதல் 9 வரை மதுரையில் கணக்கிடப்பட்ட R value 1.41 +/0.04 ஆகும். தென்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று உறுதிசெய்யப்பட்ட 4,549 கொரோனா தொற்றாளர்களில், 1,256 பேர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது தமிழகத்தில் 46,714 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 15,038 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தேசிய  சுகாதார அமைப்புகள் வள மைய முன்னாள் இயக்குநர் சுந்தர்ராமன்
தேசிய சுகாதார அமைப்புகள் வள மைய முன்னாள் இயக்குநர் சுந்தர்ராமன்

இது குறித்து வைராலஜி நிபுணர் ஜேக்கப் ஜான் கூறுகையில், ``சென்னையில் R value 1-க்கு கீழ் வந்துள்ளது, தொற்று உச்ச நிலையைக் கடந்துவிட்டதைக் குறிக்கிறது .

ஆனால், புதிதாகத் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 100 என்று குறையும்வரை, கொள்ளைநோய் இல்லை என்று கூற முடியாது.

மக்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால், இன்னும் இரண்டு வாரங்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 100, 200 என்ற எண்ணிக்கைக்கு குறையலாம். இது நாம் தளர்வுடன் இருப்பதற்கான நேரமல்ல.

தமிழகத்தில் ஆகஸ்ட் இரண்டாம் வாரம்வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி பின்னர் சென்னையில் குறைந்தது போல் குறையும்’’ என்று கூறினார் .

ஜேக்கப் ஜான்
ஜேக்கப் ஜான்

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குநர் சுந்தர்ராமன் கூறுகையில்,``மற்ற மாவட்டங்களில் தற்போது தளர்வுகள் ஏற்படுத்தியிருப்பது, பிரச்னையை ஏற்படுத்தலாம். மதுரையைப்போல கோயம்புத்தூரிலும் பாதிப்பு அதிகரிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைவதாக நினைத்துக்கொண்டிருக்கும்போது அது திடீரென்று கூடலாம்'' என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு