Published:Updated:

சீனாவில் குறைகிறது, உலக நாடுகளில் பரவுகிறது... கொரோனாவின் உண்மை நிலைதான் என்ன?! #Corona360

கொரோனா

முழுமையான கொரோனா ரிப்போர்ட்!

உலகம் முழுக்கக் கொரோனா ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து, தமிழக மருத்துவர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `கடைசியில் பாருங்கள் ஒரு குட்டியூண்டு நுண்ணுயிருக்கு நாம் பயப்படும்படி ஆகிவிட்டது!' என்று சமீபத்தில் எழுதியிருந்தார்.

ஆம், ஒரு சிறு வைரஸுக்குத்தான் இன்று உலகமே அரண்டு கிடக்கிறது.

`ஆனால், சீன அரசுதான் கொரோனா தொடங்கிய இடமான மத்திய வூகானில், நோயாளிகளின் எண்ணிக்கையும் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கிவிட்டன என அறிவித்துவிட்டதே... இனியும் நாம் ஏன் பயம்கொள்ள வேண்டும்?' என நீங்கள் கேட்கலாம்

கொரோனா வைரஸ், உலகளவில் ஏற்படுத்திய பாதிப்புகளும் இறப்புகளும்
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உண்மை என்னவெனில், சீனாவில் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் கொரோனா, உலக நாடுகள் பலவற்றிலும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இன்றளவில் 95,000-த்தைத் தொட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, விரைவில் லட்சத்தைத் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அதிவேகமாக ஆயிரக்கணக்கில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாதிப்பு தொடங்கிய நாள் முதல் இன்றுவரை 3,200-க்கும் மேலான இறப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா, இதுவரை இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த மக்களைத் தாக்கியுள்ளது எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தற்போது ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளில் வேகமாகப் பரவிவருவதாகத் தெரிகிறது. அதனால் அப்பகுதிகளில் மிகத் தீவிரமான கண்காணிப்புகளும் பயணக் கட்டுப்பாடுகளும், மக்களைத் தனிமைப்படுத்துவதற்கான விதிமுறைகளும் தீவிரமாக இயற்றப்பட்டு செயலாற்றப்பட்டு வருகின்றன.

இதுவரையில், கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியல் இங்கே...
கொரோனா பாதித்த நாடுகள்
கொரோனா பாதித்த நாடுகள்
`எத்தனை நோயாளிகள், எத்தனை இறப்புகள் என்றுதான் முடிவுக்கு வரும் கொரோனா?' என்றால், தெரியவில்லை என்பது மட்டுமே மருத்துவ உலகின் பதிலாக இருக்கிறது.

இந்த விஷயத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடும் இதுவேதான். இரு தினங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் சார்பில் வெளிவந்த அறிக்கையில்

`நோயாளிகள் இருக்கிறார்களோ இல்லையோ... உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரைக் காக்கத் தேவையான மருத்துவ இருப்பை உங்கள் மருத்துவமனைகளில் உறுதிசெய்து கொள்ளுங்கள். எப்போதும் எல்லோரும் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருங்கள்.
உலக சுகாதார நிறுவனம்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் நோயரும்பு காலம்:
கொரோனா வைரஸின் நோயரும்பு காலம்
கொரோனா வைரஸின் நோயரும்பு காலம்

இது நமக்கு அச்சத்தைக் கொடுக்க, அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக, `அனைத்து நாட்டினரும் ஆக்ஸிஜன் தெரபிக்குத் தேவையான வென்டிலேட்டர் வசதியோடு இருக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது அமெரிக்காவின் மருத்துவத்துறை.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள்:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95,000-க்கும் மேற்பட்டவர்களில் 80,000-க்கும் மேற்பட்டோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்தாம்.

கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus

சீனாவில் பிரச்னை கட்டுக்குள் வரத்தொடங்கிய பின்னரும்கூட, இன்றளவும், பலரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சீனாவுக்கு நேரடி விசிட் அடித்திருந்த உலகச் சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ப்ரூஸ், விசிட்டுக்குப் பின்னான தனது பேட்டி ஒன்றில், `உலகம் முழுவதும் இந்நேரம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு தொற்றுநோயைத் தங்களைத் தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டதன் மூலம் கட்டுப்படுத்தியிருக்கும் வூகான் மக்களுக்கு உலகமே கடன்பட்டிருக்கிறது' எனக்கூறி சீனாவுக்கு நன்றி கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

இத்தகைய உயரிய வார்த்தைகளுக்குத் தகுதியானதுதான் சீனா. அந்த அளவுக்கு சுயக்கட்டுப்பாட்டோடு இருந்து கொரோனா பிரச்னையை இப்போது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் அம்மக்கள். சீன மக்களைப்போல, கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளைச் சேர்ந்த மக்களும் சுய ஒழுக்கத்தில் அவ்வளவு கட்டுப்பாட்டோடு இருக்கிறார்களா என்பது சந்தேகமே. காரணம், உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே தற்போது சுய ஒழுக்க விஷயத்தில் தடுமாறியுள்ளது. ஆம், அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் அலட்சியத்தாலேயே அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமெரிக்க அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

கொரோனாவின் இலக்கும் எதிரிகளும் யார் தெரியுமா? - மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் | #Corona #CoronaPrecautions #COVID19 #VikatanCuts

Posted by Vikatan EMagazine on Thursday, March 5, 2020

அப்படி என்ன செய்தது நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்?

கொரோனாவை உறுதிசெய்யும் கருவியில், உலக சுகாதார நிறுவனம் அளித்த கருவிகளை விடுத்து, வேறு கருவிகளையே கடந்து ஒரு மாத காலமாக உபயோகித்து வந்திருக்கிறது அமெரிக்காவின் தேசிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். இது, நோயைக் கண்டறியும் துல்லியத்தன்மையில் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இதனால் பாதிப்பு உறுதிசெய்யப்பட வேண்டிய நபர்கள் பட்டியலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விளைவு, தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் பொதுமக்களோடு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸும் பரவிவிட்டது!

கொரோனாவும் சீன அரசும்
கொரோனாவும் சீன அரசும்
கொரோனா எவ்வளவு கொடியது?
கொரோனா எவ்வளவு கொடியது?

அமெரிக்காவைப்போல கொரோனா பிரச்னை தீவிரமாக உள்ள மற்றொரு பகுதியான கலிஃபோர்னியாவில், தற்காப்புக்குப் பயன்படுத்தப்படும் மாஸ்க்கில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள கடைகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுவிட்டன. இவையாவும் நோய் பாதிப்பு பெருகுவதற்கே வழிவகை செய்யும்.

கொரோனா மாஸ்க்
கொரோனா மாஸ்க்

அமெரிக்கா, கலிஃபோர்னியாபோல தென் கொரியா, இரான், பிற ஐரோப்பிய நாடுகளிலும்கூட சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில், கொரோனா 30 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில், கைகளைச் சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும் ஹேண்ட் சானிடைசர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இங்கே குறிப்பிடத்தக்கது.
சீன இறைச்சி வகைகள்
சீன இறைச்சி வகைகள்
சீன இறைச்சி வகைகள்
சீன இறைச்சி வகைகள்
வைரஸ் தாக்கம்
வைரஸ் தாக்கம்

`எனில், கொரோனா தீவிரம் தற்போது அடங்காதா?' என்றால், `பிரச்னை முன்பைப்போல இல்லை. ஆகவே கவலை வேண்டாம்' என்கின்றனர் சீன மருத்துவர்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இப்போது அதிலிருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கைக்கான தரவுகள். இந்த எண்ணிக்கை 53,000-த்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா... மீண்டவர்கள்!
95,000-த்தில் சரிபாதிக்கும் அதிகமானோர் நோயிலிருந்து குணமாகிவிட்டனர்.
சார்ஸ் Vs கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்ட நபர்கள் (நாள் வாரியாக)
கொரோனா தாக்கம்
கொரோனா தாக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு விஷயத்தில் நம்மை `நன்று' என்று சொல்லவைக்கும், நம்பிக்கை தரும் மற்றொரு தரவும் இருக்கிறது. அது, நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுபவர்களில் 80% பேருக்கு சாதாரண முதல் மிதமான நோயாகவே இதுவரை கொரோனா வைரஸ் இருந்துள்ளது. 13.8% பேருக்கு மட்டுமே நோய் தீவிரமாக இருந்துள்ளது. இன்னும் 6.1% பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தரவுகள் அனைத்தையும் மொத்தமாகப் பார்க்கும்போது, பிரச்னை நாம் பயப்படும் அளவுக்கு மோசமாக இல்லைதான்.

கொரோனா பாதிப்பின் திவீரம்
கொரோனா பாதிப்பின் திவீரம்
கொரோனா வைரஸின் வகைகள் :
முன்னெச்சரிக்கை!
மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டால், கொரோனா நிச்சயம் கட்டுக்குள் வந்துவிடும் என நம்பலாம்.
கொரோனா இறப்பு விகிதம்
கொரோனா இறப்பு விகிதம்

கொரோனாவுக்கு இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்திவிட முடியும். அப்படியாக அறிகுறியைக் கட்டுக்குள் கொண்டுவந்து, `சப்போர்ட்டிவ் கேர்' மூலமாக குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 53,000-க்கும் அதிகம்!

சரி, கொரோனாவிலிருந்து தப்பிக்க, முன்னெச்சரிக்கையாக என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
கொரோனா - எப்படித் தப்பிக்கலாம்?
கொரோனா - எப்படித் தப்பிக்கலாம்?
கொரோனாவுக்கான மருத்துவ இருப்புகளும் விழிப்புஉணர்வும் முழுமையாக இருக்கும்பட்சத்தில், இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

கொரோனாவை தடுக்க, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பது விதி. அந்த வகையில், கைகளை எப்போதெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான விவரம் இங்கே...

கை கழுவுதல்
கை கழுவுதல்
மீள்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு