ஏறத்தாழ 3000 நாள்களை, மாதவிடாய் காலத்தில்தான் கழிக்கின்றனர் பெண்கள். வாழ்வின் ஒருபகுதி எனச் சொல்லும் அளவுக்கான அந்த நேரத்தை, பல ஆயிரம் பெண்கள் விழிப்புணர்வு இன்றியே எதிர்கொள்கின்றனர் என்கிறது யூனிசெஃபின் ஆய்வு முடிவுகள். குறிப்பாக, `மாதவிடாய் காலத்தில் தனக்கு எந்தப் பொருள் சௌகரியமாக இருக்கும்', `எது தன்னுடைய சருமத்துக்கு உகந்தது', `எந்த நாள்களில் தனக்கு ரத்தப்போக்கு அதிகமிருக்கும்', `நாப்கினை முறையாக அப்புறப்படுத்துவது எப்படி' போன்ற தன் சுயம் சார்ந்த அடிப்படை விஷயங்கள் பல பெண்களுக்குத் தெரிவதில்லையாம்.

மாதவிடாயை எதிர்கொள்ளப் பெண்கள் உபயோகிக்கும் பொருள்களில், முதல் இடம் துணிகளுக்குத்தான் என்கின்றன சில தரவுகள்.

அடுத்ததுதான், நாப்கின்.

தொடர்ந்து மென்சுரல் கப், டேம்பூன், காட்டன் பேடு, ரீயூஸபிள் பேடு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலர், வறுமை காரணமாகக் காய்ந்த சருகுகள், இலை போன்றவற்றைக்கூட உபயோகிக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இன்னொரு பக்கம், மேலே குறிப்பிட்டவற்றில் நாப்கின் உபயோகம் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கிறது.

நாப்கினுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகளின் பட்டியல் இங்கே...
நாப்கினுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள்
நாப்கினுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள்

இந்த நிலையில், `நாப்கின் உபயோகம் அதிகரிப்பதை எண்ணி மகிழ்ச்சியடையாதீர்கள்' எனக் கூறி எச்சரிக்கின்றனர், சூழலியல் செயற்பாட்டாளர்கள். செயற்பாட்டாளர் சீமா கண்டலேவிடம் இதுகுறித்துப் பேசினோம்.

``பயன்படுத்திய நாப்கினை அப்புறப்படுத்துவது, சுற்றுச்சூழல் பிரச்னையாகிறது. ஒரு பெண், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 12 முதல் 15 நாப்கின்களை உபயோகிக்கிறார். எனில், ஒவ்வொரு பெண்ணும் வருடத்துக்கு அதிகபட்சம் 150 நாப்கின்களை உபயோகிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும், இந்தியா முழுவதும் 35 கோடி நாப்கின்கள் பெண்களால் அப்புறப்படுத்தப்படுகின்றன என்கின்றன தரவுகள். அதன்படி பார்த்தால், வருடத்துக்கு 1,13,000 டன் உபயோகப்படுத்தப்பட்ட நாப்கின்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

நாப்கின்
மண்ணிலிருந்து முற்றிலுமாக மறைய 500 முதல் 800 வருடங்கள் ஆகலாம்.

இப்படி அப்புறப்படுத்தப்படும் நாப்கின்கள், குப்பைக் கிடங்களுக்குச் சென்றடையும். அங்கு என்ன நடக்கும்? குப்பைக்கிடங்குகளில் அவை 800 டிகிரி செல்ஷியஸில் நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக எரிக்கப்பட்ட பிறகு, மண்ணைச் சென்றடையும். முறையாக எரிக்கப்படவில்லையெனில், முழுமையாக மக்காது. மண்ணை நஞ்சாக்கும். இப்படி எரியாமலிருக்கும் நாப்கினில் உள்ள ரசாயனங்கள், காற்றில் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது விஷத்தை கலக்கத் தொடங்கும். மேலும், நாப்கினின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் அடுக்குகள், மண்ணிலிருந்து முற்றிலுமாக மறைய 500 முதல் 800 வருடங்கள் ஆகலாம்.

ஒரு மென்சுரல் கப்பை, எட்டு முதல் பத்து வருடங்கள் வரை உபயோகப்படுத்தலாம்.
சீமா கண்டலே
சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே
சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே
விகடன்

முறையாக எரிக்கப்படும்போதும், நாப்கினில் உள்ள ரசாயனங்கள் காற்றில் கலந்து அதன் நச்சுத்தன்மையை வெளியேற்றும். அதுவும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இன்னொரு பக்கம், குப்பைக்கிடங்குகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் தொற்று பாதிப்புகள் ஏற்படும். இப்போது சொல்லுங்கள்... நாப்கின் உபயோகத்தின் வளர்ச்சி அதிகரிப்பதை வரவேற்கலாமா நாம்?" - அழுத்தமான கேள்வியைக் கேட்கிறார் சீமா.

மாதவிடாய் குறித்த அடிப்படையான சில உண்மைகளை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்...
மாதவிடாய் - சில உண்மைகள்
மாதவிடாய் - சில உண்மைகள்

இதற்கான தீர்வாக சீமா பரிந்துரைப்பது, மென்சுரல் கப் வகைகளை. கப்பை உபயோகிக்கும்போது, சுற்றுச்சூழல் மட்டுமன்றி பிறப்புறுப்பின் சுகாதாரமும் பாதுகாக்கப்படும் என்கிறார் அவர். கடந்த சில வருடங்களாக மென்சுரல் கப் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள சீமா, கப் உபயோகிக்கும் முறை குறித்து விரிவாகக் கூறுகிறார்.

மாதவிடாய் அசெளகரியத்திற்குத் தீர்வளிக்கும் மென்சுரல் கப்! எளிதாகப் பயன்படுத்த சில ஆலோசனைகள்

``மென்சுரல் கப், சிலிக்கான், பிளாஸ்டிக் - ரப்பர் கலவை என இரு வகைகளில் தயாரிக்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகின்றன. சிலிக்கான் கப்தான் அங்கீகரிக்கப்பட்டது என்பதால், பிளாஸ்டிக் - ரப்பர் கலவை கப்பைத் தவிர்ப்பது நல்லது. நாப்கினை குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். கப் அப்படியல்ல. ரத்தப்போக்கைப் பொறுத்துத்தான் கப் மாற்றும் நேரம் அமையும். எந்த நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கிறதோ அன்றைக்கு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளலாம். ரத்தப்போக்கு குறைவாக உள்ள நாளில், எட்டு முதல் 10 மணி நேரத்துக்கு ஒருமுறை செக் செய்துகொள்ளலாம்.

மாதவிடாயின் நான்கு நிலைகள், அந்த நிலைகளை ஆரோக்கியமாகக் கடக்க எளிமையான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

சுற்றுச்சூழல் ரீதியாகவும், மென்சுரல் கப் பரிந்துரைக்க சிறப்பானது. ஒரு கப்பை, எட்டு முதல் 10 வருடங்கள் வரை உபயோகப்படுத்தலாம் (சிலிகான் கப்). ஒரு கப்பின் விலை 500 முதல் 1,000 ரூபாய்வரை இருக்கும். பொருளாதார ரீதியாகவும் இது சிறப்பானது" என்கிறார் அவர்.

`கோலி சோடா' என்ற மறுசுழற்சி நிறுவனத்தின் தலைவர் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன், மென்சுரல் கப் உபயோகம் குறித்துப் பேசினார்.

``இந்தியாவைப் பொறுத்தவரை, மென்சுரல் கப் உபயோகம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. `அதைப் பிறப்புறுப்புக்குள் செலுத்த வேண்டுமா? அது ஆபத்தாகிவிடாதா?', `திருமணமாகாத பெண்கள் இதைப் பயன்படுத்த முடியாது', `அய்யோ லீக் ஆனால் என்ன செய்வது?' எனப் பல சந்தேகங்களும், அதைவிட அதிகமான தவறான புரிந்துணர்வுகளும் பெண்கள் மத்தியில் இருக்கின்றன.

மாதவிடாய் குறித்த அடிப்படை சந்தேகங்கள், அதற்கான மருத்துவ விளக்கங்கள் இங்கே...
`ரீயூஸபிள் துணி நாப்கின்கள்' மற்றும் `காட்டன் டிஸ்போஸபிள் நாப்கின்கள்' போன்றவற்றைப் பயன்படுத்தலாமே, பெண்களே...!
ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன்

மென்சுரல் கப்பைப் பொறுத்தவரை, அதுகுறித்த முழுமையான புரிந்துணர்வு ஏற்படும்வரை அதைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டாம் என்பதே என் பரிந்துரை. எனில், அதுவரை ரசாயனங்களால் செய்யப்பட்ட நாப்கினைத்தான் பயன்படுத்த வேண்டுமா? அதுவும் வேண்டாம். இதற்கான தீர்வாக நான் பார்ப்பது மற்றும் பரிந்துரைப்பது, `ரீயூஸபிள் துணி நாப்கின்கள்' மற்றும் `காட்டன் டிஸ்போஸபிள் நாப்கின்கள்'. இந்த வகை நாப்கின்கள், அனைவரும் அறிந்த மற்றும் அனைவருக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அதேநேரம், சுற்றுச்சூழலுக்கும் கேடு தராது.

மாதவிடாய் காலத்தை முறையாக எதிர்கொள்ள, எளிமையான சில ஆலோசனைகள் இங்கே...
ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன், கோலி சோடா
ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன், கோலி சோடா

ரீயூஸபிள் நாப்கினை ஒவ்வொரு முறையும் சோப் கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ளலாம். இதைத் துவைக்கும்போது, குளிர்ந்த நீரில் 20 முதல் 25 நிமிடங்கள்வரை ஊறவைத்துத் துவைக்க வேண்டும். சுத்தப்படுத்திய பிறகு, சூரிய ஒளியில் உலர வைக்கவும். அதிகபட்சமாக நான்கு முதல் ஐந்து மாதங்கள் பயன்படுத்தலாம். இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்திய பின் முறையாக அப்புறப்படுத்திவிடுவது நல்லது" என்கிறார் ஸ்ருதி.

கட்டுரையின் அடுத்த பகுதிக்கு செல்லுமுன், மாதவிடாய் குறித்து உங்களுக்கு எந்த அளவுக்கு தெரிந்துள்ளதென அறிய, இந்த க்விஸை அடெண்ட் பண்ணுங்கள் மக்களே!

`சரி, எங்கள் சருமத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற நாப்கினை இனி பயன்படுத்துகிறோம்' என்பவர்கள், சற்று பொறுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னுமொரு விஷயம் இருக்கிறது.

அது, முறையாக நாப்கினை அப்புறப்படுத்துவது.

``நாப்கினை சரியாக அப்புறப்படுத்துவதன் மூலம், நம் துப்புரவுப் பணியாளர்களின் நலனை நம்மால் காக்க முடியும்"

என்கிறார், செயற்பாட்டாளர் அனிஷா நிச்சானி. இவர், முறையாக நாப்கின் டிஸ்போஸ் செய்வது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறார்.

அனிஷா நிச்சானி, ஸ்வச்
அனிஷா நிச்சானி, ஸ்வச்

இவரின் `ஸ்வச்' நிறுவனம், செய்தித்தாள்களால் செய்யப்பட்ட கையடக்கப் பைகளை விற்பனை செய்துவருகிறது. பெண்கள், நாப்கினை அப்புறப்படுத்தும்போது, முறையாக மடித்து இந்தப் பைக்குள் போட்டு, பின்னர் குப்பையில் போட வேண்டும் என்பதே 'ஸ்வச்'சின் வேண்டுகோள். ஒரு பையின் விலை இரண்டு ரூபாய்; ஒரு பாக்கெட்டில் 10 பைகள் இருக்கின்றன.

ஸ்வச் பொருள்கள்
ஸ்வச் பொருள்கள்

``இந்த டிஸ்போஸிங் பைகளின் மேற்பரப்பில் நாப்கின் வடிவம் அச்சிடப்பட்டிருக்கும். பையின் மேற்பகுதியில் சிறியதாக ஸ்டிக்கர் இருப்பதால், இதை மூடிவிடவும் முடியும். இப்படிச் செய்யும்போது, குப்பையை அகற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பைகளைத் திறந்து பார்க்க மாட்டார்கள். தொற்றுப் பிரச்னைகளிலிருந்தும், அது தரும் பாதிப்புகளிலிருந்தும் காக்கப்படுவார்கள்" என்கிறார் அனிஷா.

நாப்கின் டிஸ்போஸல் மட்டுமன்றி, பீரியட் பாவர்ட்டி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார் அனிஷா. தனது 'ஸ்வச் ' நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு மத்திய அரசின் `ரூபாய்க்கு ஒரு நாப்கின்' திட்டத்தின் கீழ் கிடைக்கும் காட்டன் நாப்கின்களைப் பெற்று, அடிப்படை வசதிகள்கூட கிடைக்காத கிராமப்புறப் பெண்கள், குறிப்பாக பள்ளிச் சிறுமிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்கிறார். இதன்மூலம் மாதவிடாய்க்கால வறுமையைப் போக்க முடியும் என்கிறார்.

மாதவிடாய்... பெண்களுக்கு ஒரு குட்டி சர்வே!
இந்தக் கட்டுரை வழியாக, நாங்கள் எல்லோரும் சொல்லும் விஷயம் ஒன்றுதான். அது,
`பெண்களே... Bleed safely. Happy Periods!'

பெண்களுக்கு மாதவிடாய்க் கால விடுமுறை... தேவையா, தேவையில்லையா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு