Published:Updated:

எதிர்ப்பு சக்தி, நுரையீரல் ஆரோக்கியம்! - வைரஸ் தொற்றைத் தடுக்கும் 5 அக்குபஞ்சர் புள்ளிகள்

அக்குபஞ்சர் மூலம் குணப்படுத்தக்கூடிய நோய்களாக உலக சுகாதார மையம் 250 நோய்களைக் கூறியுள்ளது

Acupuncture

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட அலோபதி மருத்துவத்துடன், சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பர்ய மருத்துவ முறைகளும் கைகொடுத்து வருகின்றன. இந்த நிலையில், அக்குபஞ்சர் மருத்துவத்துக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் உள்ளது என்கிறார் அக்குபஞ்சர் நிபுணர் சங்கர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வதற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கொரோனா தடுப்புக்கு அக்குபஞ்சர் மருத்துவத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Acupuncture expert Shankar

கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு அக்குபஞ்சர் சிகிச்சையில் 5 புள்ளிகள் உள்ளன. இந்த ஐந்து புள்ளிகளிலும் இருபது நிமிடங்கள் அக்குபஞ்சர் சிகிச்சை ஊசிகளைக் குத்தி வைத்திருக்க வேண்டும். வாரம் ஒருமுறை என 5 வாரங்கள் தொடர் சிகிச்சை அவசியம். முறையாக அக்குபஞ்சர் சிகிச்சையைக் கற்றவர்கள் மூலமாகவே இதைச் செய்ய வேண்டும். அக்குபஞ்சர் மூலம் குணப்படுத்தக்கூடிய நோய்களாக உலக சுகாதார மையம் 250 நோய்களைப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார் அவர்.

2
DU 14

DU 14

கொரோனா தடுப்புக்கான 5 புள்ளிகள்

பின்னங்கழுத்தில் ஏழாவது எலும்புக்குக் கீழ் பள்ளம்போல் உள்ள பகுதி ஒரு புள்ளி. சர்வாங்காசனம் செய்யும்போது இந்தப் புள்ளி தூண்டப்படும். இதன்மூலம் 72 நோய்கள் குணமாகும். அதில் கொரோனாவும் ஒன்று.

3
SP 10

SP 10

மண்ணீரல், ரத்த உற்பத்திக்குத் தேவையான முக்கிய உறுப்பு. நிணநீர் நாளங்களைச் சரியாகச் செயல்பட வைக்க மண்ணீரலின் பங்கு முக்கியம். இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களுக்குச் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவர்களுக்கு ரத்த உறைவு இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இந்தப் புள்ளியைத் தூண்டுவது மூலம் ரத்த உறைதலைத் தடுக்கலாம். மூட்டு எலும்பை ஒட்டிய தொடைப்பகுதியில் உள்ளது இந்தப் புள்ளி. ஆல்பா இம்யூனோக்ளோபுலின் உற்பத்திக்கு இப்புள்ளி உதவுகிறது.

4
LU 6

LU 6

முழங்கைக்கும் மணிக்கட்டுப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது இந்தப் புள்ளி. பிரபஞ்ச சக்தி அந்த வழியாகத்தான் நுரையீரலை அடைந்து, அதற்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. நுரையீரலிலிருந்து சளியை வெளியேற்றுகிறது.

5
LI 11

LI 11

முழங்கைக்கு அருகில் இப்புள்ளி உள்ளது. பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியா தூண்டப்பட்டு மலம் வெளியேறுவதற்கு உதவுகிறது. எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்

6
ST 36

ST 36

`13 லட்சம் பேர்; எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் 2 தேர்வு; ஜீரோ கொரோனா!' -கேரள அமைச்சர் பெருமிதம்

முழங்காலுக்குக் கீழுள்ள இந்தப் புள்ளி வாழ்நாளைக் கூட்டும் புள்ளி என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ஜீரண சக்தியைக் கூட்டுகிறது.

அடுத்த கட்டுரைக்கு