Published:Updated:

மனிதப் பரிமாண வளர்ச்சிக்கு உதவிய குடல் நுண்ணுயிரிகள்! - ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?

குடல் நுண்ணுயிரிகள்
குடல் நுண்ணுயிரிகள்

நுண்ணுயிரிகள் மனிதர்கள் செல்லும் புதுப்புது சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டன.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்த முக்கியமான ஓர் ஆதாரத்தை அமெரிக்காவில் உள்ள நார்த் கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனித இனம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும்போது அந்தப் புதிய பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் உணவுக்கும் ஏற்ப உடல் தகவமைத்துக்கொள்வதற்குக் குடல் பகுதியில் காணப்பட்ட நுண்ணுயிரிகள்தான் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். இதனால்தான் பூமிப்பந்தின் நிலப்பரப்புகளை நிரப்புவதற்கு மனிதர்களுக்குப் பேருதவியாக இருந்தது இந்த நுண்ணுயிரிகள்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

குடல் நுண்ணுயிரிகள்
குடல் நுண்ணுயிரிகள்

இந்த ஆராய்ச்சி முடிவுகள் `ஃப்ரான்டியர்ஸ் இன் எக்காலஜி அண்ட் எவல்யூஷன்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மனித உடலில் காணப்படும் நுண்ணுயிரிகள் தொடர்பாக இதற்கு முன்பு வெளியான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இதைக் கண்டறிந்துள்ளனர்.

அந்த நுண்ணுயிரிகள் மனிதர்கள் செல்லும் புதுப்புது சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டன. அதனால் செரிமானம், உடலின் நச்சுகள் வெளியேற்றம், புதிய பகுதிகளில் உருவாகும் புதிய நோய்களைத் தாங்கிக்கொண்டு அவற்றிலிருந்து மீள்வதற்கு உதவுவது எனப்பல உதவிகளைச் செய்துள்ளன.

குடல் நுண்ணுயிரிகள்
குடல் நுண்ணுயிரிகள்

இது தொடர்பாகப் பேசியுள்ள ஆராய்ச்சியாளர் ராப் டன் ``முன்னோர்கள், மனிதக் குரங்குகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றின் குடல் பகுதியிலிருந்த நுண்ணுயிரிகள் தொடர்பாக ஆய்வு செய்தோம். அவற்றில் மனிதர்களின் வாழ்வியல் முறை புவியியலோடு ஒத்துப்போவதற்கு இந்த நுண்ணுயிரிகள் உதவியுள்ளன. அதன் காரணமாகவே, மனித உடல் புதிய புதிய சூழல்களிலும் உயிர் பிழைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னோர்கள் கண்டுபிடித்த உணவைப் புளிக்க வைக்கும் முறையும் மனிதர்களின் தகவமைப்புக்குப் பெரிதும் உதவியுள்ளது. உணவைப் புளிக்க வைப்பதால் அதில் உருவாகும் நுண்ணுயிரிகள் செரிமானத்துக்கு மிகவும் உதவியுள்ளன.

Vikatan
குடல் நுண்ணுயிரிகள்
குடல் நுண்ணுயிரிகள்

இதனால் உணவை நீண்ட நாள்கள் சேமித்து வைப்பதும் ஒரே இடத்தில் நீண்ட நாள்கள் தங்குவதும் சாத்தியமாகியுள்ளது. மேலும், முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்வதற்கும் இது உதவியுள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு