Published:Updated:

``கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் கொரோனாவை விரட்டும் மருந்து?!"- எய்ம்ஸ் இயக்குநர்

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் எல்லா நாடுகளும் செய்வதறியாது உள்ள நிலையில் கொரோனா ஓர் உயிர்க்கொல்லி நோய் அல்ல, கொரோனா பாதித்தவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொடர்ந்து சிகிச்சை வழங்குவதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும் என, மருத்துவர்கள் பலரும் தெரிவித்து வந்தனர். அதன்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குணமாகி வீட்டுக்கும் திரும்பி வருகின்றனர்.

ரன்தீப்
ரன்தீப்
face book

இந்த நிலையில், ஹைட்ராக்சிக்ளோரோகுயின், பாராசிட்டாமால் மாத்திரைகளும்கூட கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்குப் பயன்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால், உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தியா ஹைட்ராக்சிக்ளோரோகுயினை ஏற்றுமதி செய்தது.

கொரோனாவுக்குப் புதிய சிகிச்சையாக பிளாஸ்மா தெரபியை முயற்சி செய்துபார்க்கலாம் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலோரியா வெளியிட்டுள்ளார். அதில் ``கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவரின் உடலில் ஓடும் ரத்தத்துக்கு கொரோனா வைரஸ் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை இருக்கும். கொரோனா சிகிச்சையில் 28 நாள்கள் மீண்டெழுந்தவர்களின் உடலில் பி.லிம்போசைட் செல்களிலிருந்து சுரக்கும் ஆன்டிபயோடிக்கைச் சேகரித்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தினால் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து கொரோனாவின் தாக்கத்தை நிச்சயம் குறைக்க முடியும். அதனால்தான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சை, மருத்துவர்கள்
மாதிரி படம்

இதற்கு முன்பு எபோலா வைரஸ் பரவியபோது பிளாஸ்மா தெரபிதான் பெரும்பாலனோருக்குச் சிகிச்சையாக வழங்கப்பட்டது. கொரோனாவுக்கும் பிளாஸ்மா தெரபி உதவுமா என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லோருடைய உடலுக்கும் அந்தச் சிகிச்சை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பிளாஸ்மா தெரப்பியே கொரோனாவை விரட்டும் மருந்தாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு