Published:Updated:

பார்ட்டி கலாசாரத்துக்குப் பழகும் இளம் தலைமுறை; மறைந்திருக்கும் போதை அரக்கன்; பெற்றோர்களே அலர்ட்! - 8

Addiction (Representational Image) ( Image by Daniel Reche from Pixabay )

பார்ட்டி கலாசாரம் அதிகரித்து வரும் சூழலில் அங்கு போதைப்பொருள் நடமாட்டமும் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. இவற்றால் பெண்கள் அதிக அளவில் வஞ்சிக்கப்படுகின்றனர். `செல்லம்' என்ற பெயரில் பிள்ளைகளை அதீத சுதந்திரத்துடன் வளர்க்கும் பெற்றோருக்கான அலர்ட் இது.

பார்ட்டி கலாசாரத்துக்குப் பழகும் இளம் தலைமுறை; மறைந்திருக்கும் போதை அரக்கன்; பெற்றோர்களே அலர்ட்! - 8

பார்ட்டி கலாசாரம் அதிகரித்து வரும் சூழலில் அங்கு போதைப்பொருள் நடமாட்டமும் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. இவற்றால் பெண்கள் அதிக அளவில் வஞ்சிக்கப்படுகின்றனர். `செல்லம்' என்ற பெயரில் பிள்ளைகளை அதீத சுதந்திரத்துடன் வளர்க்கும் பெற்றோருக்கான அலர்ட் இது.

Published:Updated:
Addiction (Representational Image) ( Image by Daniel Reche from Pixabay )

எதற்கெடுத்தாலும் பார்ட்டி... எல்லாவற்றுக்கும் பார்ட்டி... எந்த வயதிலும் பார்ட்டி... இப்படி பார்ட்டி கலாசாரம் நம் சமுதாயத்தில் பரவி வருகிறது. `ஃபிரெண்ட்ஸ் கூடத்தானே போறாங்க... சாப்பிடுவாங்க... கொஞ்ச நேரம் ஜாலியா அரட்டை அடிச்சிட்டிருப்பாங்க... அவ்வளவுதானே...' என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் பார்ட்டி செல்ல அனுமதிக்கிறார்கள். ஆனால், அந்த பார்ட்டிகளில் மறைந்திருக்கும் போதை அரக்கன் உங்கள் மகன் அல்லது மகளின் வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கலாம் என்பதை அறிவீர்களா?

``புதுச்சேரியிலுள்ள மருத்துவக் கல்லூரி மாணவி அவர். வகுப்பில் டாப்பர். ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். இவ்வளவுதான் கல்லூரியிலிருப்பவர்களுக்கும், உடன் படிக்கும் மாணவர்களுக்கும் தெரியும். அந்த மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மீட்டெடுத்தனர்.

வெங்கடேஷ் பாபு
வெங்கடேஷ் பாபு

அவருக்குப் பரிச்சயமான நபர்களே அவர் சாப்பிட்ட உணவில் போதை மருந்தைக் கலந்துகொடுத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். சுயநினைவுக்கு வந்த அந்த மாணவிக்கு தனக்கு என்ன நடந்தது, யார் தன்னிடம் அப்படி நடந்துகொண்டனர் என்பது நினைவில் இல்லை. இதனால் காவல்துறையில் புகார் அளிக்கவும் முடியவில்லை. இதுபோன்று பல நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நாள்தோறும் நடக்கின்றன'' என்கிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருபவருமான வெங்கடேஷ் பாபு.

பார்ட்டி கலாசாரம் அதிகரித்து வரும் சூழலில் அங்கு போதைப்பொருள் நடமாட்டமும் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. இவற்றால் பெண்கள் அதிக அளவில் வஞ்சிக்கப்படுகின்றனர் என்கிறார் அவர். இதுபற்றி அவர் மேலும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் `செல்லம்' என்ற பெயரில் பிள்ளைகளை அதீத சுதந்திரத்துடன் வளர்க்கும் பெற்றோருக்கான அலர்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பார்ட்டிகளில் புழக்கத்தில் இருக்கும் மருந்துகளை `பார்ட்டி டிரக்ஸ்' (Party Drugs) என்பார்கள். இந்த மருந்துகள் ரசாயனங்களால் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் Psychotropic Substances என்ற வகையைச் சேர்ந்த போதை மருந்துகள். இரவு முழுவதும் பார்ட்டியில் நடனமாட, பாட்டுப் பாட ஆற்றலைக் கொடுக்கும் ஊக்க மருந்துகள் போன்று இவற்றைப் பயன்படுத்துவார்கள். ஸ்டிமுலன்ட் என்ற பிரிவின் கீழ் வருபவை இவை. இவற்றை உபயோகித்தால் தூக்கம் வராது, மூளை விழிப்புடன் இருக்கும், அதிக சுறுசுறுப்புடன் இருக்க வைக்கும். பார்ட்டியில் கலந்துகொள்பவர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள இதுபோன்ற மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இது நிச்சயம் மூளையைப் பாதிக்கும்.

Party (Representational Image)
Party (Representational Image)
Image by bridgesward from Pixabay

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்பாடு என்பது பெருநகரங்களில்தான் அதிகம் இருந்தது. தற்போது சிறு நகரங்களில்கூட இதுபோன்ற பார்ட்டிகள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. இதை ஏற்பாடு செய்வதற்கென்றே ஆட்கள் இருக்கிறார்கள். அந்த பார்ட்டிகளில் Punch Bowl என்று கூறப்படும் முறையில் குடிப்பதற்கான பானங்கள், மது போன்றவை இருக்கும். அதாவது ஒருவர் சென்று ஒரு பாட்டிலைத் திறந்து குடிப்பது போன்று இருக்காது. ஏற்கெனவே திறந்து வைத்துப் பரிமாறப்பட்டிருக்கும். யார் வேண்டுமானாலும் சென்று தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் குடித்துக்கொள்ளலாம்.

Punch Bowl முறையில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்களில் ஏற்கெனவே போதைப்பொருளைக் கலந்து வைத்துவிடுவார்கள். அதைக் குடிப்பவர்களுக்கும் அதில் என்ன கலந்திருக்கிறது, எவ்வளவு கலந்திருக்கிறது என்பது தெரியாது. அதைக் குடிப்பவர்களுக்கு லேசான போதை இருக்கும், உற்சாகமாகவும் காணப்படுவார்கள், எளிதில் சோர்வடைந்து பார்ட்டியிலிருந்து கிளம்பமாட்டார்கள், அங்கேயே அதிக நேரம் இருப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Rape Drug

இரவு நேரங்களில் வனப்பகுதிகள் போன்ற மறைவான இடங்களில் நடைபெறும் பார்ட்டிகளில் Punch Bowl-ல் போதைப்பொருள்கள் கலந்து வைத்திருப்பார்கள். அதைக் குடிப்பவர்களின் செயல்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதை உபயோகித்த நபரின் உடலில் அவருக்கே தெரியாத ரசாயன மாற்றங்களை உருவாக்கி பாலியல் ரீதியான தூண்டல்களையும் ஏற்படுத்திவிடும். இந்த மருந்துகளை பெண்கள் எடுக்கும்போது அவர்களும் பாலியல் ரீதியாகத் தூண்டப்படுவார்கள் என்பதால் அவர்களிடம் யாராவது பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அதை எதிர்த்துப் போராடும் உள்ளுணர்வு ஏற்படாது. அவர்களுக்கு ஒத்துழைக்கவே விரும்புவார்கள். மேலும் அந்த மருந்தின் தன்மை காரணமாக நினைவிழப்பும் ஏற்படும்.

Drug Addiction (Representational Image)
Drug Addiction (Representational Image)
Photo by Mishal Ibrahim on Unsplash

மீண்டும் சுயநினைவுக்கு வரும்போது தன் மீது பாலியல் வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் அது குறித்துக் காவல்துறையில் புகார் அளிக்க இயலாது. காரணம், அவர்களுக்கு எங்கு, யார், எப்போது தன்னிடம் அப்படி நடந்துகொண்டார்கள் என்பதே நினைவில் இருக்காது. எந்த நினைவையும் மீட்டெடுக்கவும் முடியாது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் அதிகம் நடைபெற்றன. அதன் காரணமாக, பெண்கள் தாங்கள் குடிக்கும் குளிர்பானங்களை ரெஸ்ட் ரூமுக்குக்கூட கையிலேயே எடுத்துச் சென்றுவிடுவார்கள். எங்காவது வைத்துவிட்டுச் சென்றுவிட்டால் அதில் எதையாவது கலந்துவிடக்கூடும் என்ற பயமே காரணம். ஆனால், நம் நாட்டில் சாப்பிடும் பொருள்களை ரெஸ்ட் ரூமுக்கு எடுத்துச் செல்லும் பழக்கம் கிடையாது. அதனால் எங்கேயாவது வைத்துவிட்டுச் செல்வார்கள். அவர்கள் போய் வருவதற்கு முன்பு அதில் போதைப்பொருளைக் கலந்துவிடுவார்கள். இந்த போதைப்பொருளானது நிறமில்லாதது,மணமில்லாதது என்பதால் எளிதில் எதிலும் கலந்துவிடவாம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

பார்ட்டி கலாசாரம்

பொதுவாக அறிமுகமுள்ள, நன்கு தெரிந்த நபர்களால்தான் இதுபோன்ற செயல்கள் அதிகம் நடைபெறுகின்றன. அறிமுகமில்லாதவர்களும் போதைப்பொருளைக் கொடுத்து தவறாக நடக்க முயலலாம். பார்ட்டிக்குச் செல்லும்போது ஒரு குளிர்பானம் குடிக்கிறார்கள் என்றால், அதை அந்த நபர்தான் ஆர்டர் செய்ய வேண்டும். அவர்தான் அந்த பாட்டிலைத் திறந்து குடிக்க வேண்டும். அவர் கண் முன்னால்தான் அந்த பாட்டில் திறக்கப்பட வேண்டும். ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்ட பானங்களைக் குடிக்கக் கூடாது. ஒருமுறை குடித்துவிட்டு அந்த பாட்டிலை எங்காவது வைத்துவிட்டு ரெஸ்ட் ரூமுக்கோ வேறு எங்காவதோ சென்று வந்துவிட்டு மீண்டும் அதை எடுத்துக் குடிக்கக் கூடாது. முக்கியமாக, பார்ட்டிக்குச் செல்லும்போது தனியாகச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
பார்ட்டிகளுக்கு செல்லும் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனரா என்பதை பெற்றோரால் கண்டறிய முடியாது. காரணம், அதைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் பிள்ளைகளிடம் தென்படாது. ஒரு குழந்தைக்கு 13 வயது ஆகிவிட்டாலே பெரியவருக்கு (Adult) தெரியும் அனைத்து விஷயங்களும் தெரிய ஆரம்பிக்கும். அதே நேரம் முழுமையாகவும் தெரியாது. அரைகுறை அறிவோடு இருப்பதால் அது சரியா தவறா என்ற முடிவை எடுக்கத் தெரியாது. எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

Addiction (Representational Image)
Addiction (Representational Image)

எனவே, குழந்தைகள் வளரும்போது அவர்களுடன் எல்லாவற்றையும் மனம்விட்டுப் பேச வேண்டும். குழந்தைகளையும் பெற்றோரிடம் அனைத்து விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளும்படி வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் பழக்கவழக்கங்கள், நண்பர்கள், எங்கு போகிறார்கள், யாருடன் சேருகிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் அறிந்துகொள்ள முடியும். போதைப்பொருள் பற்றிய விவரங்கள், அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்தெல்லாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். அதேபோன்று பிள்ளைகளுடைய அறை, பள்ளிக்கு கொண்டு செல்லும் பை, சட்டை பாக்கெட் போன்றவற்றை யெல்லாம் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். பிள்ளைகளுடன் எப்போதும் நட்பாக இருக்க வேண்டும். கண்டிப்பும் வேண்டும், கண்காணிப்பும் வேண்டும்.

காக்டெயில் பானங்கள் தெரியும்... தடுப்பூசியில்கூட காக்டெயில் வந்துவிட்டதைக் கடந்த சில மாதங்களில் கேள்விப்பட்டோம். போதைப் பொருளிலும் காக்டெயில் இருப்பதை அறிவீர்களா..?

அதென்ன காக்டெயில் டிரக்... அதன் பின்னணி என்ன..?

அது அடுத்த அத்தியாயத்தில்...

- மீள்வோம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism