கொரோனா தொற்று பல அலைகள் வரலாம் என்று ஒருபுறம் நிபுணர்கள் கணித்தாலும் மறுபுறம் நம்பிக்கையான தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்கா அறிவியல் நிபுணர் குதுப் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று பல நாடுகளில் வேகமாகப் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிவிட்டது. தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் பல உருமாற்றங்கள் தோன்றி, போக்கு காட்டி வருகிறது. தற்போது ஒமிக்ரான் உருமாற்ற வைரஸ், மூன்றாம் அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநரும் மருத்துவருமான டாக்டர் குதுப் மஹ்மூத் தெரிவித்துள்ள கருத்துகள் சற்று நம்பிக்கையை அளிக்கின்றன. இது தொடர்பாக அவர் கூறுகையில், ``இந்திய தடுப்பூசிகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்தியாவுக்கு மிகப்பெரும் சாதனை. இந்தியாவில் ஒரு வருடத்துக்குள் 60% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்திய சுகாதாரத்துறை மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் இந்த நடவடிக்கை கொண்டாடப்பட வேண்டிய சாதனை.

கொரோனா தனித்தன்மை வாய்ந்த வைரஸ். இது மிக அதிக உருமாற்றங்களைக் கொண்டுள்ளது. எனினும் கொரோனா தொற்றுநோய் உலகளவில் விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயிலிருந்து வெளிவருவோம் என்று நம்புகிறேன். அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.