Published:Updated:

சிறுநீரகக் கல் வெளியேறுவதாக நினைத்த பெண்ணுக்கு அதிர்ச்சி... பிறந்தது அழகிய ஆண் குழந்தை!

குழந்தை
News
குழந்தை ( Pixabay )

காலையில் எழுந்தவருக்கு வயிற்றில் தசைப்பிடிப்பு (Cramps) ஏற்பட்டதைப் போன்று வலி.

Published:Updated:

சிறுநீரகக் கல் வெளியேறுவதாக நினைத்த பெண்ணுக்கு அதிர்ச்சி... பிறந்தது அழகிய ஆண் குழந்தை!

காலையில் எழுந்தவருக்கு வயிற்றில் தசைப்பிடிப்பு (Cramps) ஏற்பட்டதைப் போன்று வலி.

குழந்தை
News
குழந்தை ( Pixabay )

வாழ்க்கை எப்போதும் ஆச்சர்யங்களால் சூழப்பட்டதுதான். அப்படி ஓர் ஆச்சர்யம் குழந்தை வடிவில் கிடைத்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான சர்ஜ்காஃப் என்ற பெண்ணுக்கு.

கழிவறையில் தன் உடலில் உருவாகியிருந்த சீறுநீரகக் கல் வெளியேறுகிறது என்று நினைத்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. சர்ஜ்காஃபுக்கு நீண்ட நாள்களாவே முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தது. சில நாள்களுக்கு முன்பு காலையில் எழுந்தவருக்கு வயிற்றில் தசைப்பிடிப்பு (Cramps) ஏற்பட்டதைப் போன்று வலி.

Mensuration
Mensuration
Freepik

நேரம் செல்லச் செல்ல வலியின் தீவிரம் அதிகரித்தது. இதனையடுத்து தன் அம்மாவை அழைத்து தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார். மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு கழிவறைக்குச் சென்றிருக்கிறார் சர்ஜ்காஃப். அப்போது ரத்தக்கசிவு ஏற்படுவதைக் கவனித்திருக்கிறார். பல மாதங்களாக வராமல் இருந்த மாதவிடாய் சுழற்சிதான் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் வயிற்றில் வலி ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்திருக்கிறார்.

``கழிவறையில் இருந்தவாறே தன் அம்மாவை அழைத்து மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது என்றும் சொல்லியிருக்கிறார். வலி அதிகரிக்கவே டாய்லெட் சீட்டிலேயே சற்று நேரம் உட்கார்ந்திருக்கிறார். சீட்டில் உட்கார்ந்தவாறே என்னையும் அறியாமல் அலறிவிட்டேன். இது பீரியட்ஸ் வலியைவிட மோசமாக இருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒருவேளை சிறுநீரகக் கல் வெளியேறுகிறது என்றும் நினைத்துக்கொண்டேன்.

Toilet
Toilet

மதியம் 2 மணிக்கு மேல் என் கணவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் என் உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறியதைப் போன்று இருக்கிறது என்றேன். அப்போதும் அது குழந்தை என்று நினைக்கவில்லை. நான் கழிவறையில் பார்த்தபோது என் உடலுறுப்பு ஏதோ வெளியேறிக் கிடக்கிறது என்றுதான் நினைத்தேன்.

அது என்னவென்று பார்க்கலாம் என்று கையில் எடுத்தபோதுதான் குழந்தை என்றே தெரிந்தது" என்கிறார் சர்ஜ்காஃப். கழிவறையிலிருந்து எடுத்ததும் குழந்தையிடமிருந்து எந்த அசைவும் இல்லையாம். ``ரெஸ்க்யூ 911 என்ற ரியாலிட்டி டிவி சீரிஸில் பார்த்ததை வைத்து, குழந்தையின் கண்கள், மூக்கு துவாரம் ஆகியவற்றைச் சுத்தம் செய்தேன். 10 - 15 விநாடிகளில் குழந்தை சுவாசிக்க ஆரம்பித்தது" த்ரில்லர் கதைபோல விவரிக்கிறார் அந்தத் தருணத்தை.

Baby(Representational image)
Baby(Representational image)
Pexels

இதையடுத்து தாய், சேய் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ``எனக்கு கால் வீக்கம், எடை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. இவையெல்லாம் நான் கர்ப்பமாக இருந்தேன் என்று உணர்த்தியிருக்கின்றன. நான்தான் அதை அலட்சியப்படுத்தியிருக்கிறேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சி. இது எங்களுடைய முதல் குழந்தை. அநேகமாக இதுவே எங்களின் கடைசி குழந்தையாகவும் இருக்கலாம்" என்கிறார் சர்ஜ்காஃப்.