Published:Updated:

Doctor Vikatan: உடல்வலியும் களைப்பும் கொரோனா அறிகுறிகளாக இருக்குமா?

Tired (Representational Image)
News
Tired (Representational Image) ( Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: உடல்வலியும் களைப்பும் கொரோனா அறிகுறிகளாக இருக்குமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Tired (Representational Image)
News
Tired (Representational Image) ( Pexels )

விடாத தலைவலி, உடல்வலிக்கு மருத்துவரை சந்திக்கச் சென்றால் கொரோனா பரிசோதனை செய்யச் சொல்கிறார். காய்ச்சல், சளி, இருமல் என எந்த அறிகுறியும் இல்லாமல் வெறும் உடல்வலியும் களைப்பும் மட்டுமே கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகளாக இருக்குமா?

- பாலா (விகடன் இணையத்திலிருந்து)

அனந்தகிருஷ்ணன்
அனந்தகிருஷ்ணன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அனந்தகிருஷ்ணன்.

``உங்கள் மருத்துவர் சொன்னது சரிதான். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தலைவலி, உடல்வலி, அசதிகூட கொரோனா தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். பொதுவாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரில் 85 முதல் 90 சதவிகிதம் பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஒன்றிரண்டு நாள்கள் இருக்கும்.

ஆனால் இப்போது பரவும் ஒமிக்ரான் தொற்றில் அப்படி இருப்பதில்லை. ஒருநாள் மட்டுமே காய்ச்சல், அதிலும் சிலருக்கு மிகக் குறைவான காய்ச்சலே இருப்பதைப் பார்க்கிறோம்.

A health worker takes a nasal swab sample to test for COVID-19
A health worker takes a nasal swab sample to test for COVID-19
Mahesh Kumar A

எனவே எந்த வைரஸ் காய்ச்சலுக்கும் உடல்வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இப்போதைய சூழலில் இந்த அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் செய்யாமல் கொரோனா பரிசோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானதுதான்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?