Published:Updated:

Doctor Vikatan: மார்பகங்களைச் சுற்றி ஏற்படும் பருக்கள் ஆபத்தானவையா?

Woman (Representational Image) ( Photo by Nicolas Postiglioni from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: மார்பகங்களைச் சுற்றி ஏற்படும் பருக்கள் ஆபத்தானவையா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Woman (Representational Image) ( Photo by Nicolas Postiglioni from Pexels )

பெண்களின் மார்பகங்களைச்சுற்றி ஏற்படும் பருக்கள் ஆபத்தானவையா?

- அயீஷா சித்திகா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``மார்பகங்களில் நிப்பிளைச் சுற்றி பருக்கள் மாதிரி ஏற்படுவதற்கு `மான்ட்கோமெரிஸ் டியூபர்கிள்ஸ்' (Montgomery's tubercles) என்று பெயர். செபேஷியஸ் சுரப்பிகள் எனப்படும் எண்ணெய் சுரப்பிகள், நிப்பிளைச் சுற்றியுள்ள ஏரியோலா என்ற கரும்பகுதியில் குட்டிக்குட்டியாக, பொரிப்பொரியாகக் காணப்படும். கர்ப்பிணிகளுக்கு இது அதிகம் இருக்கும். மான்ட்கோமெரிஸ் டியூபர்கிள்ஸ் சுரப்பியிலிருந்து வெளியேறும் சுரப்பானது கிருமிகளால், தாய்ப்பால் கலப்படமாகாமலும் அந்தப் பாலைக் குடிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படாமலும் காப்பாற்றும் தன்மை கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு முதல் இருபத்தைந்து எண்ணிக்கை வரைகூட இந்த மான்ட்கோமெரிஸ் டியூபர்கிள்ஸ் நிப்பிளைச் சுற்றி காணப்படலாம். இவை கர்ப்ப காலத்தில் மட்டுமன்றி, பூப்பெய்தும் பருவத்திலும், பூப்பெய்திய பிறகு பீரியட்ஸ் சுழற்சி வருவதற்கு முன்பும்கூட சில பெண்களுக்கு இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ட்ரெஸ், ஹார்மோனல் இம்பேலன்ஸ், எடை ஏறுவது, இறங்குவது, டைட்டான உள்ளாடை அணிவது போன்றவற்றாலும் சில நேரம் இப்படி வரலாம். வழக்கமாக இது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாகப் பார்க்கப்படுவதில்லை.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by cottonbro from Pexels

ஆனால் உங்கள் மார்பகக் காம்புகள் உள்ளிழுத்த நிலையில் இருப்பது, அசாதாரண கசிவு, மாற்றங்கள் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது. மற்றபடி இந்த மான்ட்கோமெரிஸ் டியூபர்கிள்ஸ் பிரச்னைக்குரியதல்ல, பயம் வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?