Published:Updated:

கொரோனா தடுப்பு மருந்து... ஆஸ்திரேலிய வாழ் இந்திய விஞ்ஞானியின் நம்பிக்கை தரும் ஆய்வு!

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்.

கோவிட் - 19 கொரோனா பாதிப்புக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணி, உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய வாழ் இந்திய விஞ்ஞானி ஒருவர், தான் கொரோனாவுக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். எஸ்.எஸ். வாசன் என்ற அந்த விஞ்ஞானி, ஆஸ்திரேலியாவின் டோஹெர்டி நிறுவனத்தின் (Australia’s Doherty Institute) சார்பில் தனது ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

எஸ்.எஸ். வாசன், விஞ்ஞானி
எஸ்.எஸ். வாசன், விஞ்ஞானி
தொற்றைத் தடுக்க மொட்டை அடித்த சீன நர்ஸ்களின் தியாகமும் சேவையும்... கொரோனா அப்டேட்ஸ்! #CoronaUpdates

இந்த ஆய்வுக்காக, கோவிட் - 19 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வைரஸ்ஸின் மாதிரி பெறப்பட்டுள்ளது. அவை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு, தன் ஆய்வுக் குழு கண்டறிந்த அந்தத் தடுப்பு மருந்து மூலம் அவற்றின் வளர்ச்சி முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் விஞ்ஞானி வாசன். தொடர்ந்து, வைரஸை பதப்படுத்தியமைக்காக ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் அவர்.

கொரோனா
கொரோனா

இந்தத் தடுப்பு மருந்தின் செயல்பாடுகள், அதுகுறித்த அடுத்தகட்ட பரிசோதனைகள் போன்றவை யாவும் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற ஆஸ்திரேலிய மத்திய அரசு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான பணிகள் யாவும் க்யூன்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில் தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் வாசன்.

சி.எஸ்.ஐ.ஆர்.ஓ-வில் மேற்கட்ட ஆய்வுக்காக கொரோனா வைரஸின் எண்ணிக்கை தற்போது அதிகப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார் அவர்.
கொரோனா
கொரோனா
வாழ்த்துகள் கூற காத்திருக்கிறோம் வாசன்!
அடுத்த கட்டுரைக்கு