லைஃப்ஸ்டைலும் புற்றுநோயும்! - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் புற்றுநோய் தொடர்பாகக் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் பதிலளிப்பார்கள்.
உலகளவில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 17 பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 17 பேர் உயிரிழப்பது உண்மைதான். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் இந்தியாவைப் பற்றி தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. பத்து இந்தியர்களில் ஒருவர் தனது வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 15 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

புற்றுநோய் எனும் தொற்றாநோய் குறிப்பிட்ட ஓர் உறுப்பில் உருவாவதோ பாதிப்பதோ கிடையாது. அசாதாரணமான அளவில் செல்கள் உடலின் எந்த உறுப்பிலும், திசுவிலும் உருவானால் அது புற்றுநோயே. உறுப்புகளைத் தாண்டி ரத்தத்திலும் கூட புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் ஓரிடத்தில் தொடங்கி பிற உறுப்புகளுக்கும் பரவும் தன்மை கொண்டது. உலக அளவில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இரண்டாவது காரணமாக புற்றுநோய் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் பற்றிய தரவுகள் அதிக அச்சுறுத்தலைத் தந்தாலும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனை முற்றிலும் குணப்படுத்தலாம். தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பயன்களைத் தந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் `லைஃப்ஸ்டைலும் புற்றுநோயும்!' - மருத்துவர்களுடன் ஒரு கலந்துரையாடல் என்ற வெபினார் பிப்ரவரி 6-ம் தேதி (சனி்க்கிழமை) நடைபெற உள்ளது. மாலை 4.30 முதல் 5.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் கிருஷ்ணகுமார், மருந்தியல் புற்றுநோய் மருத்துவர் கிருஷ்ணகுமார் ரத்னம், புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் விஜயபாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

வாழ்க்கை முறை மாற்றத்தினால் புற்றுநோய் வருவதைத் தடுக்க முடியுமா, புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வா, புற்றுநோயை முழுவதும் குணப்படுத்த முடியுமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிய தகவல்களை மருத்துவர்கள் அளிப்பார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் பதிலளிப்பார்கள்.
இந்த கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.