`மூட்டுவலிக்கு `நோ' சொல்லலாம்!' - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

மூட்டுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள், எலும்புகள் வலிமையாக இருப்பதற்கான வழிமுறைகள் எனப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இன்றைய பரபரப்பான சூழலில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. இப்போது வயதானவர்கள் மட்டுமன்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு. உடலியக்கம் இல்லாத வாழ்க்கை, கணினி முன்பாகவே மணிக்கணக்காக ஒரே நிலையில் அமர்வது எனப் பல்வேறு காரணங்களால் இளைஞர்களுக்குக்கூட மூட்டுவலி ஏற்படுகிறது.

உலக கீல்வாத தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கும் மூட்டு வலிக்கு 'நோ' சொல்லலாம்! - மூட்டு, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான ஆன்லைன் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி அக்டோபர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. மூத்த முடநீக்கியல் மருத்துவர் UT.வாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்.
மூட்டுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள், அறுவை சிகிச்சையின்றி மூட்டுவலிக்குத் தீர்வு காண முடியுமா, இளைஞர்களுக்கும் மூட்டுவலி ஏற்பட காரணங்கள், தீர்வுகள், எலும்புகள் வலிமையாக இருப்பதற்கான வழிமுறைகள் எனப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் நேயர்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர் பதிலளிப்பார்.

அக்டோபர் 18-ம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா Live Webminar-ல் பங்கேற்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்.