Election bannerElection banner
Published:Updated:

கோவிட் 19: `சித்த மருத்துவத்துடன் நலம் காப்போம்!' - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

கோவிட்: சித்த மருத்துவத்துடன் நலம் காப்போம்
கோவிட்: சித்த மருத்துவத்துடன் நலம் காப்போம்

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது பற்றிய அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையை சமாளிக்க முடியாமல் நாடே திணறிக் கொண்டிருக்கிறது. நமக்கு நெருங்கிய வட்டத்திலுள்ளவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் சிலர் உயிரிழந்த சம்பவத்தையும்கூட கேள்விப்பட்டிருப்போம். வைரஸைப் பற்றி சரியான புரிதல் இல்லாதபோது தகுந்த பாதுகாப்போடு இருந்தவர்கள், அதன் தீவிரம் பற்றி நன்கு அறிந்தும் பலர் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

covid patient
covid patient

நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமாவதைவிட, நோய் ஏற்படாமல் தடுப்பதுதான் சரியானது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது பற்றிய அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுபற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து 'கோவிட் 2-ம் அலை: சித்த மருத்துவத்துடன் நலம் காப்போம்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. சித்த மருத்துவர் வேலாயுதம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

Healthy
Healthy
Freepik

கோவிட் பெருந்தொற்று சித்த மருத்துவத்துடன் எதிர்கொள்வது எப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ முறைகள், பெருந்தொற்றுக் காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றிய ஆலோசனகளை அளிப்பார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கமளிப்பார்.

இந்நிகழ்ச்சி மே 1-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 முதல் 6 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

கோவிட்: சித்த மருத்துவத்துடன் நலம் காப்போம்
கோவிட்: சித்த மருத்துவத்துடன் நலம் காப்போம்

நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு