Published:Updated:

``அந்தக் கதையில் வரும் சிட்டுக்குருவிபோல வாழ்கிறேன்!" - தற்சார்பு வாழ்வு பற்றி பகிரும் சண்முகலட்சுமி

Happy Living (Representational Image) ( Pixabay )

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு மலைத் தொடரில் அமைந்திருக்கும் பாபநாசம் சித்தர் கலைக்கூடத்தில் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி நடைபெறவுள்ளது.

``அந்தக் கதையில் வரும் சிட்டுக்குருவிபோல வாழ்கிறேன்!" - தற்சார்பு வாழ்வு பற்றி பகிரும் சண்முகலட்சுமி

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு மலைத் தொடரில் அமைந்திருக்கும் பாபநாசம் சித்தர் கலைக்கூடத்தில் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி நடைபெறவுள்ளது.

Published:Updated:
Happy Living (Representational Image) ( Pixabay )

மாற்றத்தை நோக்கி ஓரடி நகர்ந்தால் அது பல மைல் தூரம் நம்மை இழுத்துப் போகும். தற்சார்பு வாழ்வை நோக்கித் திரும்ப விரும்பும் அனைவருக்கும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சண்முகலட்சுமி ஓர் உதாரணம். சண்முகலட்சுமி, அக்குஹீலர். மருத்துவராக வேண்டும் என்பதே அவரது கனவும். அதற்கான வாய்ப்பு அமையாததால் மருந்தாளுநர் பட்டயப்படிப்பை முடித்தார். திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தாயாகிய பின் 2015-ம் ஆண்டு உடலில் அலர்ஜி தொந்தரவு ஏற்பட்டதால் பல கஷ்டங்களை அனுபவித்தார்.

சண்முகலட்சுமி
சண்முகலட்சுமி

"உணவை எடுத்துக்கொள்ளவே முடியாது. மீறி சாப்பிட்டால் உடல் முழுதும் அலர்ஜி ஏற்படும். தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூடத் தோன்றியது. இதற்கான சிகிச்சையில் இருக்கும்போதுதான் தற்சார்பு வாழ்க்கையை நோக்கி என் வாழ்வு திரும்பியது. என் உடலும் மெள்ள குணமடைந்தது. எப்பேற்பட்ட சூழலிலும் பூமி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதையும் உணர்ந்தேன்" எனும் சண்முகலட்சுமி தற்சார்பு வாழ்க்கைக்கு மாறிய பின்பு அவரிடம் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"முதல் விஷயமாக பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சோப் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்புறம் எப்படி பாத்திரம் கழுவுவது என்பது தானே உங்கள் கேள்வி? நாட்டு மருந்துக் கிடையில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கு கிடைக்கும் பூந்திக்கொட்டை போதும் பாத்திரம் கழுவுவதற்கு. பூந்திக்கொட்டை நாட்டு மருந்துக் கடைகளில் ஒரு கிலோ ரூபாய் 140 முதல் ரூபாய் 160 வரை விலையில் கிடைக்கும். பூந்திக்கொட்டையை உடைத்து தோல் பகுதியை மட்டும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின் தோலிலிருக்கும் வளவளப்பு தண்ணீரில் கலந்து சோப்பு திரவம் போல மாறிவிடும்.

பூந்திக்கொட்டை
பூந்திக்கொட்டை

எங்கள் வீட்டில் ஒரு கிலோ பூந்திக்கொட்டை ஒன்றரை மாதத்துக்கு போதுமானதாக இருக்கும். பண்டிகை, விசேஷ தினங்களில் பாத்திரங்கள் அதிகமாக இருந்தாலும் பூந்திக்கொட்டையை வைத்தே சமாளித்து விடுவோம்" என்பவர் குளிப்பதற்கும் சோப் பயன்படுத்துவதில்லை. "ரசாயனங்களால் தயாரிக்கப்படுவது சோப்பு. அதனால் குளியலுக்கு சோப் பயன்படுத்துவதில்லை. உடலுக்குத் தேவைப்படும் அளவு தலை முதல் கால் வரை தண்ணீர் ஊற்றி குளித்தால் சோப் தேவையே இல்லை" என்றார்.

"அதே போல துணியையும் வெறும் தண்ணீரில் அலசினால் போதுமானது. வெறும் தண்ணீரில் அலசும்போது துணிகளுக்கு கூடுதல் பலம் கொடுத்து தேய்க்க வேண்டும். விடாப்பிடியான கறை இருந்தால் Bio enzyme பயன்படுத்தலாம். ஒரு மடங்கு வெல்லம், மூன்று மடங்கு ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழம் தோல்,10 மடங்கு தண்ணீர் ஆகியவற்றை ஒரு பெரிய கேனில் சேர்த்து மூன்று முதல் நான்கு மாதங்கள் ஊறவைத்தால் Bio enzyme தயாராகிவிடும்" என்பவர் தனக்குத் தேவையான பெரும்பாலான காய்கறிகளை மாடித்தோட்டத்திலேயே விளைவித்து வந்தார்.

துணி நாப்கின்
துணி நாப்கின்

"என் கணவரின் இறப்புக்குப் பிறகு குடும்பத்தைத் தனியாளாக பார்த்துக்கொள்வதால் மாடித்தோட்டத்தை கவனிக்க முடியவில்லை. தற்போது கீரை மட்டுமே பயிரிட்டுள்ளேன். மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின் உடலுக்கும் மண்ணுக்கும் தீங்கு விளைவிப்பதால் துணி நாப்கின் பயன்படுத்தத் தொடங்கினேன். நான் மட்டுமல்ல என் குழந்தைகளும் என்னைப் பார்த்து இதே போன்ற வாழ்க்கையையே வாழ முற்படுகிறார்கள். வங்காரி மாத்தாயின் கதை ஒன்றில் காடே தீப்பற்றி எரியும்போது ஒரு சிட்டுக்குருவி மட்டும் தண்ணீரைத் தன் அலகால் எடுத்து தீயை அணைக்க முயற்சிக்கும்.

அதனிடம், எப்படி உன் சிறு அலகினால் தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முடியும் என்று கேட்கும்போது, என்னைப் போன்று நூற்றுக்கணக்கான குருவிகள் சேர்ந்தால் தீயை அணைக்க முடியும் அல்லவா, அதற்கு நான் தொடக்கமாக இருக்கிறேன் என்று பதில் அளித்தது. அப்படி நானும் என் குடும்பமும் சிட்டுக்குருவி போல செயல்படுகிறோம்" - புன்சிரிப்புடன் நிறைவு செய்தார் சண்முக லட்சுமி.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

தற்சார்பு வாழ்க்கையின் அனுபவத்தை உங்களுக்கு நேரடியாக அளிக்கும் வகையில் அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து 'நல்வாழ்வு நம் கையில்!' என்ற தற்சார்பு வாழ்வியல் பயிற்சியை ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு மலைத் தொடரில் அமைந்திருக்கும் பாபநாசம் சித்தர் கலைக்கூடத்தில் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி நடைபெறவுள்ளது. 3 பகல், 2 இரவுகள் என நடைபெறும் இந்தப் பயிற்சியில் தென்மேற்கு பருவமழையின் சாரலை அனுபவித்தவாறே வாழ்வை நிறைவாக வாழ்வதற்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

பாபநாசம்
பாபநாசம்

பயிற்சியில் என்னென்ன சிறப்புகள்?

* தற்சாற்பு வாழ்வியலின் முக்கியத்துவம்

* உடலினை உறுதி செய்யும் மந்திரம்

* நோய்களை விரட்டும் மூலிகைத் தோட்டம் அமைத்தல்

* ஆற்றில் நீராடல்

* நிலாச்சோறு

* யோகா, எளிய உடற்பயிற்சி

மூன்று நாள்களும் அறுசுவைமிக்க ஆர்கானிக் உணவு வழங்கப்படும்.

* மூலிகை உலா

* அவசர காலத்தில் கைகொடுக்கும் மருந்தில்லா வர்ம மருத்துவம்

* தற்சார்பு வாழ்க்கை - Spot Visit

* பாரம்பர்ய விளையாட்டு

இன்னும் பல ஆச்சர்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன.

பொதிகை மலையும், சலசலத்து ஓடும் ஆறும், மூலிகைகளின் நடுவில் நடைபெறும் பயிற்சியும் நினைவிலிருந்து அழிக்க முடியாத அனுபவங்களைத் தர காத்திருக்கின்றன.
பயிற்சி நடைபெறும் இடத்தின் ஒரு பகுதி
பயிற்சி நடைபெறும் இடத்தின் ஒரு பகுதி

கட்டணம் எவ்வளவு?

* நபர் ஒருவருக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, Spot Visit என அனைத்துக்கும் சேர்த்து சிறப்பு சலுகைக் கட்டணம் ரூ.6,999 (ஜி.எஸ்.டி உள்பட).

* மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

* மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ரூ.3,999 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.

பயிற்சிக்கு மொத்தம் 40 இடங்கள் மட்டுமே உள்ளதால் முந்துபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

இயற்கையின் வழியில் வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா? அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்தும் 'நல்வாழ்வு நம் கையில்' - தற்சார்பு வாழ்வியல் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

முன்பதிவு விவரங்களுக்கு

99400 22128, 97909 90404

பயிற்சியில் பங்கேற்க க்ளிக் செய்யவும்.