Published:Updated:

அதிகரிக்கும் இதயப் பிரச்னைகள்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - வழிகாட்டும் அவள் விகடன் நிகழ்ச்சி

இதய ஆரோக்கியத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள், இதய பிரச்னைகளுக்கான தீர்வுகள், உணவும் இதய நலமும் உள்ளிட்ட விஷயங்களுக்கான ஆலோசனைகள் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனித உடலிலேயே மிகவும் வலுவான தசை இதயம். ஒரு குழந்தை கருவில் உருவான 3-வது வாரமே அதன் இதயத்துடிப்பு தொடங்கிவிடும். ஒரு மனிதன் சராரியாக 70 வயது வரை வாழ்ந்தால் அவனது இதயம் 250 கோடி முறை துடிக்குமாம். அப்படி வலுவாக இருக்கும் இதயம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மனஅழுத்தத்துடன் வாழ்தல், புகைபிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் நோய்களுக்கு ஆளாகிறது.

Heart attack (Representational Image)
Heart attack (Representational Image)
Pixabay
இதய வலியா, வாயுப் பிரச்சனையா... எப்படிக் கண்டறிவது? மருத்துவர் ஆலோசனை! | Doubt of Common Man

உலக இதய அறக்கட்டளையின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் 1.86 கோடி பேர் இதய ரத்தநாள பிரச்னைகளால் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழக்கின்றனர். வேறெந்தக் காரணங்களைவிடவும் இதய ரத்தநாள பிரச்னைகளால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகம். அப்படி உயிரிழப்பவர்களில் 85% பேர் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் உயிரிழக்கின்றனர்.

இதயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக இதய அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதியை உலக இதய தினமாக அனுசரிக்கின்றன.

Heart Care (Representatinal Image)
Heart Care (Representatinal Image)
Photo by Karolina Grabowska from Pexels

இந்த ஆண்டு உலக இதய தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து `இதயத்தைக் கொஞ்சம் கவனிப்போம்!' என்கிற ஆன்லைன் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. செப்டம்பர் 25-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இதய சிகிச்சை மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜி மருத்துவர் பி.ஜெயபாண்டியன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார். இதயத்தின் ஆரோக்கியத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள், இதய பிரச்னைகளுக்கான தீர்வுகள், உணவும் இதய நலமும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசவிருக்கிறார்.

Heart day -  webinar
Heart day - webinar
பத்தில் இரண்டாகக் குறைந்த மாரடைப்பு... கொரோனா லாக்டௌனின் மறுபக்கம்!

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் தனிப்பட்ட கேள்விகளுக்கும் நிகழ்ச்சியில் மருத்துவர் பதிலளிப்பார். கட்டணமில்லா இந்த வெபினாரில் கலந்துகொள்ள இந்த லிங்கில் பதிவு செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு