Election bannerElection banner
Published:Updated:

கல்லீரலையும் கவனிங்க பாஸ்! - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

கல்லீரல் ஆரோக்கியம்
கல்லீரல் ஆரோக்கியம்

ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே கல்லீரல் ரத்தத்தை உற்பத்தி செய்யத் தொடங்கிவிடும்.

நம் உடலில் அதிகம் கண்டுகொள்ளப்படாத உறுப்பு என்றால் அது கல்லீரல்தான். இதயம், சிறுநீரகம் போன்று அதிகம் பேசப்படும் உறுப்புகளின் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்லீரலுக்கு நாம் கொடுப்பதில்லை. அதன் நலனுக்காக விஷயங்களில் அக்கறை செலுத்துவதும் இல்லை.

கல்லீரல்
கல்லீரல்

உள்ளுறுப்புகளில் பெரிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் உடல் இயக்கத்துக்குத் தேவையான 500 அவசியமான பணிகளைச் செய்கிறது. நமது உடல் முழுக்க ஓடும் ரத்தத்தை உற்பத்தி செய்வதே கல்லீரல்தான். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே கல்லீரல் ரத்தத்தை உற்பத்தி செய்யத் தொடங்கிவிடும்.

கல்லீரல் நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து கல்லீரல் ஆரோக்கியம் A to Z என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

Liver
Liver

கல்லீரல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும் காரணிகள் எவை, மதுப்பழக்கமும் கல்லீரல் சேதமும், ஃபேட்டி லிவர் பிரச்னைக்கான தீர்வுகள், கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவர் பி.எல். அழகம்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும் மருத்துவர் நேரடி ஆலோசனை வழங்குவார். ஏப்ரல் 17-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

Liver health awareness
Liver health awareness

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு