Published:Updated:

̀ஒமிக்ரான் - ஓடவும் வேண்டாம்; ஒளியவும் வேண்டாம்!' - ஆரோக்கிய ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி

ஒமிக்ரான் குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி
News
ஒமிக்ரான் குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

ஒமிக்ரான் உள்ளிட்ட புதிய வேரியன்ட் பாதிப்புகள் குறித்த தகவல்கள், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள், தடுப்பூசி சந்தேகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மருத்துவர் ஆலோசனைகளை வழங்குவார்.

தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டது. அலட்சியமாக இருந்தால், மிக அதிகமான பாதிப்புகளை இது ஏற்படுத்தும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஓரு வாரத்துக்கு முன்னரே அறிவித்துவிட்டார். பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒமிக்ரான்
ஒமிக்ரான்
omicron

இரண்டு அலைகளைக் கடந்து சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனாவுடன் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம் என்றாலும் ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் எனப் புதுப்புது வேரியன்ட் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, நமக்கும் அந்த அச்சம் தொற்றிக்கொள்கிறது.

ஏற்கெனவே பாதிப்பிலிருந்து மீண்டவர், ஒருமுறைகூட தொற்று பாதிக்காதவர், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என யாராக இருந்தாலும் இந்தத் தொற்று தொடர்பாக சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுவது வழக்கம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

இதுபோன்ற சந்தேகங்களுக்கு தீர்வளிக்கும் வகையில் அவள் விகடன் சார்பில் `ஒமிக்ரான்...ஓடவும் வேண்டாம்; ஒளியவும் வேண்டாம்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) நண்பகல் 12 முதல் 1 மணி வரை ஆன்லைனில் நடைபெறவுள்ளது. மருத்துவத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பொது மருத்துவர் அருணாசலம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒமிக்ரான் உள்ளிட்ட புதிய வேரியன்ட் பாதிப்புகள் குறித்த தகவல்கள், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள், தடுப்பூசி சந்தேகங்கள் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவார். இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

ஒமிக்ரான் குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி
ஒமிக்ரான் குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

இந்தக் கட்டணமில்லா நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.