Election bannerElection banner
Published:Updated:

கோவிட் 19: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... டயட்டில் செய்ய வேண்டியவை என்ன? - வழிகாட்டல் நிகழ்ச்சி

அவள் விகடன் சார்பில் டயட் கைடன்ஸ் நிகழ்ச்சி
அவள் விகடன் சார்பில் டயட் கைடன்ஸ் நிகழ்ச்சி

அவள் விகடன் சார்பில் டயட் கைடன்ஸ் பற்றிய ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

எந்த உடல்நலப் பிரச்னை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் நாம் கேட்கும் முதல் கேள்வி, 'டாக்டர் என்ன டயட் எடுத்துக்கணும்?' என்பதுதான். கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையிலும் உணவுமுறை பற்றி பல்வேறு குழப்பங்கள் நமக்குள் இருக்கும். பெருந்தொற்றுடன் கோடைக்காலமும் சேர்ந்துள்ளதால் இந்த நேரத்தில் எதைத் தவிர்க்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் குழம்புவோம்.

Diet
Diet
Image by mohamed Hassan from Pixabay

நம் உறவினர்கள், நண்பர்கள் என நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களில் யாருக்கேனும் கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு என்னென்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது போன்ற புதிய சந்தேகங்களும் உருவாகியிருக் கின்றன. உணவு தொடர்பாக நமக்கு எழும் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்க அவள் விகடன் கட்டணமில்லா வெபினாரை ஏற்பாடு செய்துள்ளது.

அவள் விகடன் சார்பில் `குட்டீஸ் முதல் முதியோர்வரை பின்பற்ற வேண்டிய டயட் கைடன்ஸ்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் செலிப்ரிட்டி டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் கலந்துகொள்கிறார்.

Celebrity Dietician Shiny Surendran
Celebrity Dietician Shiny Surendran

பிரபலங்களின் டயட்டீஷியனான இவர், இத்துறையில் 20 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் உள்ளவர். கார்த்தி, சசிகுமார், மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா ராஜேஷ் எனத் திரைப்பிரபலங்கள் பலரும், தொழில்துறை பிரபலங்களும் இவரிடம் டயட் ஆலோசனைகள் பெற்றுப் பலனடைந்தவர்கள்.

கோவிட் காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள், ஆரோக்கிய உணவை வாழ்க்கை முறையாக மாற்றுவது எப்படி, வொர்க் ஃப்ரம் ஹோம், க்வாரன்டீனிலிருப்பவர்கள், கோவிட்டிலிருந்து மீண்டவர் களுக்கான டயட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசவிருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் நேரடியாகப் பதிலளிப்பார்.

அவள் விகடன் சார்பில் டயட் கைடன்ஸ் நிகழ்ச்சி
அவள் விகடன் சார்பில் டயட் கைடன்ஸ் நிகழ்ச்சி

கட்டணமில்லா இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு