Published:Updated:

பக்கவாதம்; `FAST’ அறிகுறிகள் கவனம்!

பக்கவாதம் குறித்த வெபினார்

பக்கவாதம் ஏற்படும் சமயங்களில் `FAST’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்கவாதம்; `FAST’ அறிகுறிகள் கவனம்!

பக்கவாதம் ஏற்படும் சமயங்களில் `FAST’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Published:Updated:
பக்கவாதம் குறித்த வெபினார்

ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி உலக பக்கவாத தினமாக அனுசரிக்கப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான் `பிரெய்ன் அட்டாக்’ எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து மரணம்கூட ஏற்படலாம்.

ஸ்ட்ரோக் - பக்கவாதம்
ஸ்ட்ரோக் - பக்கவாதம்

ஆனால் தகுந்த நேரத்தில் சரியான மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கும் பட்சத்தில் தரமான வாழ்க்கையை வாழலாம். பக்கவாதம் ஏற்படும் சமயங்களில் மருத்துவர்கள் ’FAST’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

F - Face Deviation: முகம் ஒரு பக்கமாகக் கோணுதல். குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

A - Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.

brain
brain

S - Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.

T - Time to treatment: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

பக்கவாதம் குறித்த முழுமையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் அவள் விகடன் மற்றும் சேலம் Manipal Hospitals இணைந்து வழங்கும் `பக்கவாதம்... ஆரம்பத்திலேயே கண்டறிவோம்! நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்' என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடைபெறவுள்ளது.

பக்கவாதம் குறித்த வெபினார்
பக்கவாதம் குறித்த வெபினார்

மருத்துவமனையைச் சேர்ந்த மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்.ரகுநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களும் பதில் அளிக்கவிருக்கிறார்.

அக்டோபர் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.