கோவிட்-19 தடுப்பூசி பற்றிய சந்தேகங்களா... விடை தருகிறது அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி!

கோவிட் தடுப்பூசி குறித்து உங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது அவள் விகடன்.
கட்டுக்கடங்காமல் பரவிய கோவிட்-19 தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகளின் மருத்துவர்கள் ஒருபுறம் போராடுகிறார்கள் என்றால் தடுப்பூசிகளைக் கண்டறிய விஞ்ஞானிகள் மற்றொருபுறம் போராடினார்கள். அதன் விளைவாக உலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கோவிஷீல்டு, கோவேக்ஸின் என்ற இரண்டு தடுப்பூசிகளின் முதல் தவணை முன்களப் பணியாளர் களுக்குப் போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை ஊசிகள் பிப்ரவரி 13-ம் தேதி போடப்படவுள்ளது. வெகு விரைவில் தடுப்பூசிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வரவுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் அதைப் போடுவதும் போடாமல் தவிர்ப்பதும் முழுக்க முழுக்க தனிநபர் விருப்பம். ஆனால், அதைப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள், யாரெல்லாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும், அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா, தடுப்பூசி பற்றி நாம் கேள்விப்படும் தகவல்களின் உண்மைத்தன்மை என்பதைப் பற்றியெல்லாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

கோவிட் தடுப்பூசி குறித்து உங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது அவள் விகடன். அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து 'கோவிட்-19 தடுப்பூசி - உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள்' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. பிப்ரவரி 13-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை வெபினார் நடைபெறும்.
காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் பொது மருத்துவருமான ஐயப்பன் பொன்னுசாமி, தொற்றுநோய் மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சந்தேகங்களுக்கான விடைகளை அளிப்பார்கள்.

கோவிட் தடுப்பூசி மட்டுமல்ல அனைத்து தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
இந்தக் கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள உங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுங்கள். முன்பதிவுக்கு கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.