Published:Updated:

பெண்களை அதிகம் பாதிக்கும் அனீமியா பிரச்னை; மீள்வது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

அனீமியா குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள முக்கியமான புரதத்தைதான் `ஹீமோகுளோபின்' என்று சொல்கிறோம். `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை சராசரி அளவைவிடக் குறைந்தால் அது அனீமியா எனப்படும் ரத்தச்சோகையைக் குறிக்கும்.

பெண்களை அதிகம் பாதிக்கும் அனீமியா பிரச்னை; மீள்வது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள முக்கியமான புரதத்தைதான் `ஹீமோகுளோபின்' என்று சொல்கிறோம். `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை சராசரி அளவைவிடக் குறைந்தால் அது அனீமியா எனப்படும் ரத்தச்சோகையைக் குறிக்கும்.

Published:Updated:
அனீமியா குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

அனீமியா எனப்படும் ரத்தச்சோகை சாதாரணமாகக் கடந்துவிடக்கூடிய பாதிப்பல்ல. சரியான நேரத்தில் கண்டறிந்து அதைச் சரிசெய்துவிடவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் அதிகம். தரவுகளின்படி, 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்தச்சோகை பிரச்னை இருக்கலாம்.

அனீமியா என்பது என்ன?

ரத்தசோகை
ரத்தசோகை
விகடன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும், செல்லுக்கும் ஆக்ஸிஜன் தேவை. நம் உடலில் ஓடும் ரத்தத்தின் வழியாகத்தான் ஆக்ஸிஜன் சென்றடைகிறது. ரத்தத்தில், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என மூன்று வகை இருக்கின்றன. இவற்றில், ரத்தச் சிவப்பணுக்கள்தாம் ஒவ்வோர் உறுப்புக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு சேர்க்கின்றன. ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள முக்கியமான புரதத்தைதான் `ஹீமோகுளோபின்' என்று சொல்கிறோம். `ஹீமோகுளோபின்' எண்ணிக்கை சராசரி அளவைவிடக் குறைந்தால் அது அனீமியா எனப்படும் ரத்தச்சோகையைக் குறிக்கும்.

`ஹீமோகுளோபின்' எண்ணிக்கை குறையும்போது உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் பல உடல் நல பாதிப்புகள் உண்டாகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகளிர் தினத்தை முன்னிட்டு அனீமியா எனும் ரத்தச்சோகை பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் Prithvi Inner Wears இணைந்து, `நீங்க Iron Lady ஆகணுமா?' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை மார்ச் 12-ம் தேதி (சனிக்கிழமை) நடத்தவுள்ளன.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் மருத்துவர் ஸ்ரீதேவி. அனீமியா யாருக்கெல்லாம் ஏற்படலாம், பாதிப்பிலிருந்து மீள என்ன வழி, அனீமியா பிரச்னைக்கு என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவார்.

அனீமியா குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி
அனீமியா குறித்த ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பார். மார்ச் 12-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.