Published:Updated:

`நரம்பு பிரச்னையால்கூட மூட்டுவலி வரலாம்; எப்படி?' - விளக்கும் ஆன்லைன் நிகழ்ச்சி

மூட்டு வலிக்கான ஆலோசனை நிகழ்ச்சி

இந்த கட்டணமில்லா வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது. மூட்டுவலிக்கும் தண்டுவடத்துக்கும், நரம்பு பிரச்னைக்கும் உள்ள தொடர்பு, பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள், சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

`நரம்பு பிரச்னையால்கூட மூட்டுவலி வரலாம்; எப்படி?' - விளக்கும் ஆன்லைன் நிகழ்ச்சி

இந்த கட்டணமில்லா வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது. மூட்டுவலிக்கும் தண்டுவடத்துக்கும், நரம்பு பிரச்னைக்கும் உள்ள தொடர்பு, பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள், சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

Published:Updated:
மூட்டு வலிக்கான ஆலோசனை நிகழ்ச்சி

வயது மூப்பின் காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே இருந்த மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் இப்போது எல்லா வயதினரையும் மிரட்டிப் பார்க்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், உணவு, உடல் பருமன், விளையாட்டுக் காயங்கள், தற்போதைய பெருந்தொற்றுக் காலம் என இதற்கான காரணங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன.

Back Pain
Back Pain
Image by mohamed Hassan from Pixabay

மிக அதிகமான உடல் உழைப்பு, மிகக் குறைந்த உடல் உழைப்பு இருக்கும் எந்த வயதினரும் மூட்டுவலி, முதுகுவலியைச் சந்திக்க நேரலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மூட்டுவலியும், முதுகுவலியும் எலும்பு சார்ந்த தேய்மானப் பிரச்னையாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மூட்டுவலி, முதுகுவலி போன்றவை தண்டுவடத்தின் நரம்பு பிரச்னையாகக்கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூட்டுவலி, முதுகுவலி பிரச்னை உள்ள அனைவருக்கும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை. ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், மருந்து, மாத்திரை, உடற்பயிற்சி, உணவு, வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்டவை மூலமாக 90% பேருக்கு பிரச்னையைச் சரிபடுத்தலாம் என்றும் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

Joint Pain (Representational Image)
Joint Pain (Representational Image)
Image by Angelo Esslinger from Pixabay

மூட்டுவலி தொடர்பான இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அளிக்கும் வகையில், அவள் விகடன் மற்றும் Fortis Vadapalani மருத்துவமனை இணைந்து `மூட்டுவலி, தண்டுவடம், நரம்பு பிரச்னை... அலர்ட்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நாளை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடத்தவுள்ளன.

முடநீக்கியல் மருத்துவர் டி.கோகுல்ராஜ், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுதாகர் காசிநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

மூட்டுவலிக்கும் தண்டுவடத்துக்கும், நரம்பு பிரச்னைக்கும் உள்ள தொடர்பு, பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள், சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனைகள் வழங்குவார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் தனிப்பட்ட கேள்விகளுக்கும் மருத்துவர்கள் ஆலோசனைகளை அளிப்பார்கள்.

மூட்டு வலிக்கான ஆலோசனை நிகழ்ச்சி
மூட்டு வலிக்கான ஆலோசனை நிகழ்ச்சி

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.