Published:Updated:

மாரடைப்பு என்னும் ஆபத்தில் இளைஞர்கள்; தற்காத்துக்கொள்வது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இளம்வயதில் இதயநோய் - கட்டணமில்லா வெபினார்
இளம்வயதில் இதயநோய் - கட்டணமில்லா வெபினார்

இளம்வயதில் இதயநோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை பற்றிய ஆலோசனைகள் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்பெல்லாம் இதயநோய், மாரடைப்பு என்றால் 50, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற நிலை இருந்தது. தற்போது இளவயதினரிடையேவும் இந்தப் பிரச்னை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Heart Care (Representatinal Image)
Heart Care (Representatinal Image)
Photo by Karolina Grabowska from Pexels
இதய வலியா, வாயுப் பிரச்சனையா... எப்படிக் கண்டறிவது? மருத்துவர் ஆலோசனை! | Doubt of Common Man

இதய நோய் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வொன்றை நடத்தியது. அதில் மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயச் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன் இளம் வயதிலேயே மரணம் நிகழ்வது கண்டறியப்பட்டது. மேலும், தூக்கமின்மையும் இளைஞர்களிடையை இதயநோய்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

உடல் இயக்கத்துக்கு அடிப்படையாக இருப்பது இதயம். வாழ்வியல் மாற்றங்களால் அதன் செயல்திறன் பாதிக்கப்படும்போது, உடலின் அனைத்து உள்ளுறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். எனவே இளம் தலைமுறை இதய நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று அந்த ஆய்வின் முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Heart attack (Representational Image)
Heart attack (Representational Image)
Pixabay

உலக இதய தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் `இளம்வயதில் இதயநோய்... காரணங்கள், தீர்வுகள்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறவுள்ளது. இதய மருத்துவர்கள் ஆர்.சக்திவேல், டி.ஜோசப் ஆகியோர் நிகழ்ச்சி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழ்ச்சியில் இளம்வயதில் இதயநோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை பற்றிய தகவல்கள் உள்ளிட்டவை அளிக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்போரின் தனிப்பட்ட கேள்விகளுக்கும் மருத்துவர்கள் பதிலளிப்பார்கள்.

இளம்வயதில் இதயநோய் - கட்டணமில்லா வெபினார்
இளம்வயதில் இதயநோய் - கட்டணமில்லா வெபினார்
கேன்சர் மற்றும் இதய பிரச்னைகள்... பயன் தரும் புதிய பாலிசிகள்!

கட்டணமில்லா இந்த வெபினார் செப்டம்பர் 29-ம் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை நடைபெறும். கலந்துகொள்ள இந்த லிங்கில் பதிவு செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு