Published:Updated:

இளைஞர்களையும் தாக்கும் `பிரெயின் அட்டாக்'; தவிர்ப்பது எப்படி? - வழிகாட்டும் அவள் விகடன் நிகழ்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரெயின் அட்டாக் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிரெயின் அட்டாக் - விழிப்புணர்வு நிகழ்ச்சி

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி, இளைஞர்கள் மத்தியில் பக்கவாதம் அதிகரிக்கக் காரணம் என்ன, பக்கவாதம் பாதித்து மீண்டவர்களுக்கான ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்படும். அக்டோபர் 29-ம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்போ, ரத்தக்குழாய் வெடித்து ரத்தக்சிவு ஏற்படுவதையோ `ஸ்ட்ரோக்' அல்லது பக்கவாதம் என்கிறோம். இதயத்தில் இதே பிரச்னை ஏற்படுவதை `ஹார்ட் அட்டாக்' என்று அழைப்பதைப் போல மூளையில் ஏற்படும் இந்தப் பிரச்னையை 'பிரெயின் அட்டாக்' என்கின்றனர்.

பக்கவாதம்
பக்கவாதம்
Image by Gerd Altmann from Pixabay
Covid Questions: கொரோனாவிலிருந்து குணமானவர்களை பாதிக்கும் `பிரெயின் ஃபாக்'; என்ன தீர்வு?

இந்தியாவைப் பொறுத்தவரை சராசரியாக ஆண்டுக்கு 6 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். தாமதமாக மருத்துவமனைக்குச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பக்கவாதம் பாதித்தவர்களில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

உலகளவில் 1990களை ஒப்பிடும்போது பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது என்கின்றன மருத்துவத் தரவுகள். ஆறு விநாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு வரிசையில் பக்கவாதமும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்தான். வயதானவர்களை மட்டுமல்ல இளைஞர்கள் மத்தியிலும் பக்கவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்பது வேதனையானது.

ஆனால் வாழ்க்கைமுறையில் சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Human brain
Human brain
Pixabay

பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து, `பக்கவாதம்...காரணங்கள், தீர்வுகள், ஆலோசனைகள்' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை அக்டோபர் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளன.

காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் புவனேஸ்வரி ராஜேந்திரன், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.அருண் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனை வழங்குவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் யாருக்கெல்லாம் அதிகம், வராமல் தடுப்பது எப்படி, இளைஞர்கள் மத்தியில் பக்கவாதம் அதிகரிக்க காரணம் என்ன, பக்கவாதம் பாதித்து மீண்டவர்களுக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் தனிப்பட்ட சந்தேகங்களுக்கும் விடையளிப்பார்கள்.

பிரெயின் அட்டாக் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிரெயின் அட்டாக் - விழிப்புணர்வு நிகழ்ச்சி
`குளிர்ந்த நீரில் குளித்தால் பக்கவாதம் வருமா?' - வாட்ஸ்அப் ஃபார்வர்டும் உண்மையும்!

அக்டோபர் 29-ம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். கலந்துகொள்ள கீழ்க்காணும் இந்த லிங்கில் பதிவு செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு