தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒரு லட்சம் ஆண்களில் 94 பேரும், ஒரு லட்சம் பெண்களில் 104 பேரும் ஏதாவது ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 இந்தியர்களில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களால் புற்றுநோய் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் இவை மூன்றும் இதற்கு முக்கியப் பங்களிக்கின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோவிட்-19 தொற்று உலகை அச்சுறுத்த ஆரம்பித்தபோதுதான் நம்மில் பலரும் ஆரோக்கிய மாற்றங்களுக்கு அடியெடுத்து வைத்திருக்கிறோம். ஆரோக்கிய பழக்கவழங்கள், உணவு உள்ளிட்டவையே வாழ்க்கை முறையாக மாறும்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் மெள்ள மெள்ள குறையத் தொடங்கும்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை `புற்றுநோயை எளிதாக விரட்டலாம்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைன் மூலம் நடத்துகின்றன.
வேலம்மாள் மருத்துவமனையின் மார்பகம் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் அறுவை சிகிச்சை மருத்துவர் சுகன்யா, புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் தீபக் சந்திரசேகரன், புற்றுநோய் மருத்துவர் பாலாம்பிகா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது, பாதிப்பு ஏற்பட்டால் எளிதாக குணமடைவது எப்படி, சிகிச்சை முறைகள், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட புற்றுநோய் தொடர்பான A to Z ஆலோசனைகளை அளிப்பார்கள். இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் மருத்துவர்கள் பதிலளிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.