தேசிய குடும்பல நல சுகாதார அமைப்பின் ஆய்வு முடிவில் பெண்கள், குறிப்பாக நகரத்துப் பெண்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்துக் காணப்படுகிறது என்கிற தகவல் வெளியானது. ஹார்மோன் மாற்றங்கள், மகப்பேறு, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் மத்தியில் உடல்பருமன் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
உடல்பருமனாக இருந்தால் வயது அதிகரிக்கும்போது சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் ஆகியவை மட்டுமே பாதிக்கும் என நினைக்கிறோம். ஆனால், உடல் பருமனாக இருந்தால் சுமார் 13 வகையான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் பருமனாக இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு அதிகம். மார்பகப் புற்றுநோய் அதிகம் காணப்படுவது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்தான். மெனோபாஸ் ஆன பின்பு உடல்பருமனாக இருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடல் பருமன் மற்றும் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவள் விகடன் மற்றும் Apollo Proton Cancer Centre மருத்துவமனை இணைந்து `உடல்பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா?’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை மார்ச் 5-ம் தேதி நடத்தவுள்ளன. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Apollo Proton Cancer Centre மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மஞ்சுளா ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குவார். உடல் பருமனுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு, உடல் பருமனாக இருப்பவர்கள் புற்றுநோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், புற்றுநோய் ஏற்பட்டால் அதை ஆரம்பத்தில் கண்டறிவது, சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் அளிப்பார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் மருத்துவர் பதில் அளிப்பார். மார்ச் 5-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 முதல் நண்பகல் 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.