ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 3,000 நாள்களை மாதவிடாய் காலத்தில்தான் கழிக்கிறார். கிட்டத்தட்ட வாழ்வின் ஒருபகுதி எனச் சொல்லும் அளவுக்கான அந்த நேரத்தை, பல ஆயிரம் பெண்கள் விழிப்புணர்வு இன்றியே எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக, `மாதவிடாய் காலத்தில் தனக்கு எது சௌகர்யமாக இருக்கும்', `எது தன்னுடைய சருமத்துக்கு உகந்தது', `எந்த நாள்களில் தனக்கு ரத்தப்போக்கு அதிகமிருக்கும்', `நாப்கினை முறையாக அப்புறப்படுத்துவது எப்படி' போன்ற சுயம் சார்ந்த அடிப்படை விஷயங்கள் பல பெண்களுக்குத் தெரிவதில்லை என்கின்றன ஆய்வுகள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பெண்கள் தினத்தை முன்னிட்டு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவள் விகடன் மற்றும் Prithvi Inner Wears ஆகியவை இணைந்து `Happy Periods!' என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தவுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற மகப்பேறு மருத்துவரும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணருமான ஜெயஸ்ரீ ஷர்மா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல்நல, மனநல மாற்றங்களைக் கையாள்வது எப்படி, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் தொடர்பான வேறு பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசவுள்ளார். இதுதவிர நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.
மார்ச் 5-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.