Published:Updated:

அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்; பாதுகாத்துக்கொள்வது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

மார்பகப் புற்றுநோய்' சந்தேகங்களும் தீர்வுகளும்

மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்படும்.

அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்; பாதுகாத்துக்கொள்வது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்படும்.

Published:Updated:
மார்பகப் புற்றுநோய்' சந்தேகங்களும் தீர்வுகளும்

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய். 2020-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புதிதாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 6,85,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். காலநிலை, பொருளாதாரப் பின்னணி என எந்த வேறுபாடுகளுமின்றி பல பெண்களும் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.

Breast cancer
Breast cancer
Pixabay

பெண்களைத் தவிர, 0.5 முதல் 1% ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு நிலவரப்படி 13.9 லட்சமாக இருந்த மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, 2025-ம் ஆண்டு 15.7 லட்சமாக அதிரிக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிடன் நகரங்களில் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.இந்நிலையில், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் திருச்சி சில்வர்லைன் மருத்துவமனை இணைந்து `மார்பகப் புற்றுநோய்... சந்தேகங்களும் தீர்வுகளும்' என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 2-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளன.

Breast cancer
Breast cancer
Pixabay

சில்வர்லைன் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜி.செந்தில்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குவார். மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேல்விகளுக்கும் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் ரேடியோதெரபி மருத்துவர் எல். சோபியா ஆகியோர் பதிலளிப்பார்கள்.

மார்பகப் புற்றுநோய் சந்தேகங்களும் தீர்வுகளும்
மார்பகப் புற்றுநோய் சந்தேகங்களும் தீர்வுகளும்

அக்டோபர் 2-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.