Published:Updated:

பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்; எவ்வாறு தடுக்கலாம்? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி!

பெண்களை அதிகம் பாதிக்கிறதா புற்றுநோய்? - வெபினார்

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்கள் எவை, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், நோய் பாதித்தால் ஆரம்ப நிலையிலேயே எப்படிக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது, சிகிச்சையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவார்கள்.

உலக அளவில் பெண்களைவிட ஆண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்தியாவில் தொற்றா நோய்களின் வரிசையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது புற்றுநோயால்தான்.

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின்படி, 2020-ம் ஆண்டு நிலவரப்படி ஒரு லட்சம் ஆண்களில் 94 பேருக்கும் ஒரு லட்சம் பெண்களில் 104 பேருக்கும் ஏதாவது ஒரு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

Cancer
Cancer
Photo by Miguel Á. Padriñán from Pexels

மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஆகியவை பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்கள். அதிக கொழுப்புள்ள உணவுகள், உடல் பருமன் போன்றவை பெண்களைப் புற்றுநோய் தாக்குவதற்கான முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. உடல் பருமனால் மட்டுமே ஒரு நபருக்கு 13 வகையான புற்றுநோய்கள் பாதிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் மரபணு, சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகளும் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் வி.எஸ் மருத்துவமனை இணைந்து `பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள்! - அறிவோம்... தெளிவோம்!’ ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை பிப்ரவரி 19-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளன.

Cancer -Representational Image
Cancer -Representational Image
Photo by Conscious Design on Unsplash

வி.எஸ் மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரும், மூத்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவரும் முன்னாள் பேராசிரியருமான எஸ்.சுப்ரமணியன் மற்றும் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெகதீஸ் சந்திர போஸ் ஆகிய இருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்கள் எவை, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், நோய் பாதித்தால் ஆரம்ப நிலையிலேயே எப்படிக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது, சிகிச்சையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குவார்கள்.

பெண்களை அதிகம் பாதிக்கிறதா புற்றுநோய்? - வெபினார்
பெண்களை அதிகம் பாதிக்கிறதா புற்றுநோய்? - வெபினார்

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நேரடி கேள்விகளுக்கும் மருத்துவர்கள் பதிலளிப்பார்கள். பிப்ரவரி 19-ம் தேதி மாலை 3 முதல் 4 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.