உடலில் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை சிறுநீரை வெளியேற்றும் ஓர் உறுப்பாக மட்டுமே பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான நீரைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு அவ்வளவு சுலபமானது அல்ல. சிறுநீரகத்தின் செயல்பாடுதான் உடலில் உள்ள ரசாயனங்களை சமநிலையில் வைக்கிறது.
சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு 190 - 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், சுமார் 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலோ, பழுதடைந்தாலோ உடலின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். சிறுநீரை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளில் சிறுநீரகப் புற்றுநோயும் ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியாவைப் பொறுத்தவரை 1 லட்சம் ஆண்களில் 2 பேர், 1 லட்சம் பெண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் சிறுநீரகப் புற்றுநோய் பாதிக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். சிறுநீரகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் Apollo Proton Cancer Centre இணைந்து `சிறுநீரகப் புற்றுநோய்... ஆலோசனைகள், தீர்வுகள்!’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை மார்ச் 19-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளன.
மருத்துவமனையைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் மருத்துருமான ஸ்ரீவத்சன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குவார். சிறுநீரகப் புற்றுநோய்க்கான காரணங்கள், யாருக்கெல்லாம் ஏற்படும், தடுக்கும் வழிகள், சிறுநீகரகப் புற்றுநோய் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கும் மருத்துவர் பதில் அளிப்பார். மார்ச் 19-ம் தேதி காலை 11 முதல் நண்பகல் 12 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.