Published:Updated:

சர்க்கரை நோயை வெல்வது எப்படி? - வழிகாட்டும் அவள் விகடனின் ஆன்லைன் நிகழ்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சர்க்கரைநோயை வெல்வது எப்படி?
சர்க்கரைநோயை வெல்வது எப்படி?

சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைப்பது எப்படி, இணை நோய்கள் உள்ளவர்களுக்கான ஆலோசனைகள், உணவு, உடற்பயிற்சி என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை அளிக்கப்படும். இந்நிகழ்ச்சி நாளை மாலை 4 முதல் 5 மணி வரை ஆன்லைனில் நடைபெறும்.

உடலில் என்ன பிரச்னை என்று மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, `உங்களுக்கு ஷுகர் இருக்கா?' என்பதாகத்தான் இருக்கும். சர்க்கரைநோய் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு தொற்றாநோய். இந்தியாவில் மட்டும் 7.3 கோடி பெரியவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். குடும்பப் பின்னணி, வாழ்க்கை முறை மாற்றம், கர்ப்பகாலம் என சர்க்கரைநோய்க்கான காரணிகள் ஏராளம்.

Diabetes
Diabetes
Photo: Pixabay
Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?

அதுமட்டுமல்லாமல் வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் சர்க்கரைநோய் அதைத் தீவிரப்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் ரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்து, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி என கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்ந்தால் சர்க்கரைநோய் என்பது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

சர்க்கரைநோய் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள், குழப்பங்கள் எழுந்து வருகின்றன. அதற்குத் தீர்வளிக்கும் வகையில் அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து `சர்க்கரைநோயை எளிதாக வெல்லலாம்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நாளை (நவம்பர் 13-ம் தேதி - சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளன.

Diabetes
Diabetes
Pixabay

மருத்துவமனையின் மூத்த சர்க்கரைநோய் மருத்துவர் சி.ஆர்.மகேஷ் பாபு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார். நோயைக் கட்டுக்குள் வைப்பது எப்படி, இணை நோய்கள் உள்ளவர்களுக்கான ஆலோசனைகள், உணவு, உடற்பயிற்சி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசவிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கு மருத்துவர் பதில் அளிப்பார். நவம்பர் 13-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும்.

சர்க்கரைநோயை வெல்வது எப்படி?
சர்க்கரைநோயை வெல்வது எப்படி?
Covid Questions: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்பது உண்மையா?

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு