Published:Updated:

`தாய்மை வரம் பெற...' - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தாய்மை வரம் பெற - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி!
தாய்மை வரம் பெற - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி!

அன்னையர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து `தாய்மை வரம் பெற...' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை வழங்கவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அனைத்து செல்வங்களையும்விட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் குழந்தைப் பேறு இல்லாமல் பல தம்பதியர் அவதிப்படுகின்றனர். மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் எனப் பல்வேறு காரணங்கள் குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை திருமணமான தம்பதிகளில் 10 முதல் 15 சதவிகிதம் பேர் குழந்தையின்மை குறைபாட்டால் அவதியுறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைபேறு
குழந்தைபேறு

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தாய்மையடைவது குறித்து பல்வேறு குழப்பங்களும் அச்சங்களும் நிலவுகின்றன. குழந்தைப்பேறு அடைவது குறித்த ஆலோசனைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கங்களை வழங்கவிருக்கிறது அவள் விகடன்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து `தாய்மை வரம் பெற...' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை வழங்கவுள்ளது.

குழந்தைப் பேறு
குழந்தைப் பேறு

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தையின்மை சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் முல்லை வேலுத்தம்பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கும் நேரடியாகப் பதிலளிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மே 8-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 முதல் நண்பகல் 12 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

webinar
webinar

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு