`மெனோபாஸ்' என்ற வார்த்தைக்கு மாதாமாதம் வரும் மாதவிடாய் சுழற்சி நிற்பது என்றுதான் பல பெண்களுக்குத் தெரியும். இனி மாதாமாதம் அவஸ்தைப்பட வேண்டாம் என்றும் பலர் கருதுவதுண்டு. ஆனால் பெரும்பாலானானவர்களுக்கு அந்த நேரத்தில் உடலில், மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மெனோபாஸ் சமயத்தில் உடல், மனம் சார்ந்து பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மனநலத்தையும் ஆரோக்கியமாக பேணுவதன் மூலம் மெனோபாஸ் எனும் நிலையை பாசிட்டிவ்வாக எதிர்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவள் விகடன் மற்றும் Prithvi Inner Wears இணைந்து `மெனோபாஸ்...A to Z ஆலோசனைகள்!' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை மார்ச் 19-ம் தேதி (சனிக்கிழமை) நடத்துகின்றன.
சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார். மெனோபாஸ் நிலையை எப்படிக் கையாள்வது, அந்த நேரத்தில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள், உடற்பயிற்சி, மெனோபாஸ் சமயத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி, அதன் அவசியம் என்ன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோனைகளை வழங்குவார்.

இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் மெனோபாஸ் தொடர்பான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பார். மார்ச் 19-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை இந்த நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.