இந்திய மக்கள்தொகையில் சுமார் 17.2% பேர் நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமில்லாத நொறுக்குத் தீனிகள் என ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

அந்த உணவுகளில் அளவுக்கு அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை காணப்படும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் ஏற்பட்டு அது சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. சாதாரண உணவுப் பழக்கம் சிறுநீரகம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிவதில்லை. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒருவருக்கு உயர்ரத்த அழுத்தம் காணப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர்களில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதை அறியாதவர்கள். இதுதவிர, சாதாரண சிறுநீர்ப்பாதை தொற்று, சிறுநீரகக் கல் ஆகிய பிரச்னைகள்கூட நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்குக் காரணமாக அமையலாம். இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் 60% பேருக்கு நோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது.

அந்த நேரத்தில் சிறுநீரகங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வாக அமையும். இந்த `சைலன்ட் கில்லர்' நோயை எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள், உப்பு, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், சரியான உடல் எடையைப் பேணுதல் போன்றவற்றால் வராமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவள் விகடன் மற்றும் Manipal Hospitals Salem இணைந்து, `இளைஞர்களும் சிறுநீரகப் பிரச்னைகளும்!' என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் ஏப்ரல் 2-ம் தேதி (சனிக்கிழமை) நடத்தவுள்ளது. மருத்துவமனையைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் ஆர்.அசோக்குமார், சிறுநீரக அறுவைசிகிச்சை மருத்துவர் எம்.பிரகதீஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்கள். ஏப்ரல் 2-ம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.