Published:Updated:

கோவிட்- 19: முதியோர் நலம் காப்பது எப்படி? - அவள் விகடனின் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

முதியோர் நலம் - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி
முதியோர் நலம் - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி

முதியவர்களுக்கு கோவிட் வந்தால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறார்.

கோவிட் பெருந்தொற்றுச் சூழல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே அச்சத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 85 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருந்தாலும், தீவிர பாதிப்புள்ள குறைவான எண்ணிக்கையுடையவர்கள் படும் சிரமங்களையும் துயரங்களையும் சொல்லி மாளாது.

Elders
Elders
Pixabay

இதுபோன்ற சூழலில் அதிக ஆபத்துள்ளவர்கள் பட்டியலில் முதியவர்கள் இருக்கின்றனர். அதனால் முதியவர்கள் இருக்கும் வீடுகள், தனியே வசிக்கும் முதியோர் சற்று பதற்றத்துடனேயே இருக்கின்றனர். முதியவர்கள் இதுபோன்ற சூழலில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை அவள் விகடன் ஒருங்கிணைத்துள்ளது.

அவள் விகடன் வழங்கும் `கோவிட்-19 சூழலில் முதியோர் நலம் காப்பது எப்படி?' என்ற கட்டணமில்லா ஆன்லைன் நிகழ்ச்சி மே 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 முதல் 8 மணி வரை நடைபெறவுள்ளது. தொற்றுநோய் மற்றும் முதியோர் நல மருத்துவர் அஷ்வின் கருப்பன் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பேசுகிறார்.

covid-19 spread
covid-19 spread

தனியாக வாழும் முதியோருக்கான ஆலோசனைகள், வீட்டிலிருக்கும் முதியோரை கோவிட் தொற்றாமல் பாதுகாப்பது எப்படி, முதியவர்களுக்கு கோவிட் வந்தால் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

முதியோர் நலம் மட்டுமல்லாமல் கோவிட், தடுப்பூசி உள்ளிட்ட பொதுவான கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

கட்டணமில்லா வெபினார்
கட்டணமில்லா வெபினார்

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு