Published:Updated:

குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய் மற்றும் மூளை பிரச்னைகள்; தீர்வு என்ன? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை தொடர்பான பிரச்னைகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான காரணங்கள், சிகிச்சைகள், நோய் பாதிக்காமல் தடுக்க முடியுமா, சிகிச்சையிலிருக்கும் குழந்தைகளுக்கானஆலோசனைகள், குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பிற பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்குவார்.

பெரியவர்களைத் தாக்கும் புற்றுநோய் குறித்து நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் 5 முதல் 14 வயதுள்ள குழந்தைகள் இறப்புக்கான பொதுவான காரணங்களில் 9-வது இடத்தில் புற்றுநோய் உள்ளது.

Cancer
Cancer
Photo by Anna Shvets from Pexels

ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையைத் தாக்கும் புற்றுநோய், நிணநீர் சுரப்பி புற்றுநோய், மத்திய நரம்பியல் மண்டல புற்றுநோய் உள்ளிட்டவை குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்களில் முக்கியமானவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி உலகப் புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் Apollo proton cancer centre மருத்துவமனை ஆகியவை இணைந்து `குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை தொடர்பான பிரச்னைகள் - ஆலோசனைகள், தீர்வுகள்' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

Child (Representational Image)
Child (Representational Image)
Photo by Bianca from Pexels

Apollo proton cancer centre மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ரூபேஷ் குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குவார்.

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான காரணங்கள், சிகிச்சைகள், நோய் பாதிக்காமல் தடுக்க முடியுமா, சிகிச்சையிலிருக்கும் குழந்தைகளுக்கானஆலோசனைகள், குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பிற பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்குவார். இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்போரின் கேள்விகளுக்கும் மருத்துவர் பதிலளிப்பார்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை தொடர்பான பிரச்னைகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை தொடர்பான பிரச்னைகள்

பிப்ரவரி 12-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 முதல் 12 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.