Published:Updated:

`குழந்தையின்மை... A to Z தீர்வுகள்!' - அவள் விகடனின் கட்டணமில்லா ஆன்லைன் நிகழ்ச்சி

Webinar about infertility
Webinar about infertility

இந்தியாவைப் பொறுத்தவரை, 3 கோடி தம்பதியர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 30 லட்சம் பேர் மட்டுமே அதற்காக முனைப்போடு சிகிச்சை பெறுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருமணமான பெண்களை அச்சுறுத்தும் வார்த்தை குழந்தையின்மை. திருமணமான கொஞ்ச நாள்களிலேயே `ஏதும் விசேஷமில்லையா?' என்கிற வார்த்தைகள் பெண்களைக் கூடுதல் படபடப்புக்கு ஆளாக்குகின்றன. வாழ்வியல் மாற்றம், சுற்றுச்சூழல், கணவரிடமும் குறைபாடுகள் எனக் குழந்தையின்மைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

Parenting - Representational Image
Parenting - Representational Image
Image by RitaE from Pixabay

இந்தியாவைப் பொறுத்தவரை, 3 கோடி தம்பதியர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 30 லட்சம் பேர் மட்டுமே அதற்காக முனைப்போடு சிகிச்சை பெறுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

குழந்தையின்மையைப் பொறுத்தவரை கிராமங்களைவிட நகர்ப்புறங்களில் அதிகமாகக் காணப்படுவதாகவும், ஆறு தம்பதியரில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.

கர்ப்பிணி -Representational Image
கர்ப்பிணி -Representational Image

பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தையின்மை பிரச்னையை எப்படிக் கையாள வேண்டும் என்கிற குழப்பமும் பலருக்கு இருக்கிறது. அதைக் களையும் வகையில் அவள் விகடன் மற்றும் OASIS Fertility மருத்துவமனை இணைந்து `குழந்தையின்மை... A to Z தீர்வுகள்' என்கிற ஆன்லைன் ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூன் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 முதல் 5.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். OASIS Fertility மருத்துவமனையின் மூத்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வசுந்தரா ஜெகந்நாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குவார்.

Webinar about infertility
Webinar about infertility

பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடுவது, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்ய வேண்டியவை, குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்குவார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்.

கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு