Published:Updated:

நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை; தண்டுவடத்தைப் பாதுகாப்பது எப்படி? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

சாலைகளில் பயணம், நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றுதல், அதிக நேரம் வாகனம் ஓட்டுதல், தவறான நிலையில் அமர்வது, தண்டுவட காயங்கள் உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியான தண்டுவடம், மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப் பணியைச் செய்கிறது. மூளையுடன் இணைந்து உடலின் இயக்கங்களை தண்டுவடம் கட்டுப்படுத்துகிறது. அத்தகைய தண்டுவடத்தின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகக் காணப்படுவதுடன் அலட்சியமும் காணப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

Spinal cord (Representational Image)
Spinal cord (Representational Image)
Pixabay
கழுத்து வலி, முதுகு வலி குறைக்க எளிய யோகாசனங்கள்!

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.50 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை தண்டுவட காயங்களால் அவறுதியுறுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பெரும்பாலான தண்டுவட காயங்கள் சாலை விபத்துகள், கீழே விழுதல், வன்முறை சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படுகின்றன.

அலுவலகம், வொர்க் ஃப்ரம் ஹோமில் உட்காரும் நிலை தொடங்கி சாலைப் பயணம் வரை அன்றாடம் நமது தண்டுவடத்தை பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையில் அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து `உங்கள் முதுகு தண்டுவடத்தைப் பாதுகாப்பது எப்படி?' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

Back Pain
Back Pain
Image by mohamed Hassan from Pixabay

அக்டோபர் 16-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை ஆன்லைனில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். மருத்துவமனையின் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர். வெற்றி நல்லதம்பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளையும் சந்தேகங்களுக்கு விளக்கங்களையும் அளிக்கவிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாலைகளில் பயணம், நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் பணியாற்றுதல், அதிக நேரம் வாகனம் ஓட்டுதல், தவறான நிலையில் அமர்வது, தண்டுவட காயங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளும் விளக்கங்களும் அளிக்கவுள்ளார். இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் மருத்துவர் விடையளிப்பார்.

தண்டுவடம் பாதுகாப்போம்
தண்டுவடம் பாதுகாப்போம்
திருமணம் முதல் பார்ட்டி வரை; மேக்கப்பில் அசத்த அட்வான்ஸ்டு பயிற்சி; சிறப்புக் கட்டணத்தில்..!

இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு