இந்தியாவில் சுமார் 3 கோடி தம்பதியர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 30 லட்சம் பேர் மட்டுமே அதற்காக முனைப்போடு சிகிச்சை பெறுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. திருமணமான பெண்களை அச்சுறுத்தும் வார்த்தை குழந்தையின்மை. திருமணமான சில நாள்களிலேயே `எப்போ விசேஷம்?' என்ற கேள்வி பெண்களைக் கூடுதல் படபடப்புக்கு ஆளாக்குகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குழந்தையின்மைக்கு வாழ்வியல் மாற்றம், சுற்றுச்சூழல், கணவரிடமும் குறைபாடுகள் எனப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கிராமங்களைவிட நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்னை அதிகம் காணப்படுவதாகவும், ஆறு தம்பதியரில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.
ஒமிக்ரான் பரவலால் ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலையின் சூழலில் குழந்தையின்மை பிரச்னையை எப்படிக் கையாள வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. குழந்தையின்மை சிகிச்சையை இதுபோன்ற நேரங்களில் திட்டமிடலாமா, தடுப்பூசி செலுத்தும்போது குழந்தையின்மை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா, குழந்தையின்மை சிகிச்சைக்குச் சென்றால் கோவிட் தொற்று ஏற்படுமா போன்ற கேள்விகளும் உள்ளன.

பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் களையவும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையிலும் அவள் விகடன் மற்றும் OASIS Fertility மருத்துவமனை இணைந்து `ஒமிக்ரான் சூழலில் கர்ப்பத்தைத் திட்டமிடுவது எப்படி?’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி ஆன்லைனில் நடத்தவுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
OASIS Fertility மருத்துவமனையின் மூத்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வசுந்தரா ஜெகந்நாதன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குவார். ஒமிக்ரான் சூழலில் குழந்தைக்குத் திட்டமிடுவது, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்ய வேண்டியவை, குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர் ஆலோசனைகள் வழங்குவார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்.

ஜனவரி 29-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்தக் கட்டணமில்லா வெபினாரில் பங்கேற்ற முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.